பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் தூய்மை பணி: உள்ளாட்சி நடவடிக்கை எடுக்குமா?

Added : மே 13, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் துாய்மைப்பணிகளை மேற்கொள்வதற்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், 300க்கும் அதிகமான அரசுப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளுக்கு வழக்கமாக, மே மாதம் விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாத கால இடைவெளியால், புதர்கள் நிறைந்தும், குப்பைக்கழிவுகள் குவிந்தும் சுகாதாரமற்ற சூழலாக மாறி விடுகிறது. இந்நிலையில், 'கொரோனா' பாதிப்பை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு, மார்ச் பாதியிலிருந்தே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஏப்., முழுவதும், மற்றும் மே மாதமும் விடுமுறை அளிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மரங்கள், அதிகமுள்ள பள்ளிகளில் முழுவதும் குப்பைகள் நிறைந்து, பள்ளிகளின் நிலை சுகாதாரமற்றதாக மாறியுள்ளது. ஆசிரியர்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்குச்சென்று, அவ்வப்போது துாய்மைப்பணியாளர்கள் மூலம் சுகாதாரப்பணிகளை மேற்கொள்கின்றனர்.பள்ளிகளுக்கு தொலைதுாரத்திலிருந்து வரும் ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்புகளும் இல்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியிட்ட பின்னர், ஒரே முறையில் இவ்வாறு குப்பைகளை எளிதில் அகற்ற முடியாது என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதனால், தற்போது, ஊராட்சிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்வது போல, அந்த ஊராட்சிகளிலும், நகராட்சிகளிலும் இருக்கும் அரசு பள்ளிகளிலும், ஒரு நாள் பள்ளி முழுவதுமான துாய்மைப்பணிக்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளுக்கு, விடுமுறை முடியும் வரை, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் கண்காணிப்பும் தேவையாக உள்ளதென, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X