காய்கறி விலை பட்டியல் வெளியிடாத எம்.எம்.சி.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலை பட்டியல் வெளியிடாத எம்.எம்.சி.,

Added : மே 13, 2020
Share

கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு பகுதி, திருமழிசையில் செயல்பட துவங்கியுள்ள நிலையில், தினசரி, காய்கறி விலை பட்டியல் வெளியிடுவதில், அங்காடி நிர்வாக குழுவான, எம்.எம்.சி.,க்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகத்துக்காக, அங்காடி நிர்வாக குழு, 1996ல் ஏற்படுத்தப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனை விலை நிர்ணயிக்கும் அதிகாரம், இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, தினமும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலையை, அங்காடி நிர்வாக குழு வெளியிடும். கொரோனா பரவல் பிரச்னையால், கோயம்பேடு மார்க்கெட் மே, 5ல் மூடப்பட்டது. இதனால், மே, 5க்கு பின், காய்கறி, பழங்கள் விலைப்பட்டியல் வெளியிடுவதை, அங்காடி நிர்வாக குழு நிறுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில், கோயம்பேடு மார்க்கெட்டின் மொத்த விற்பனை பிரிவு, மே, 11ல் செயல்பட துவங்கியது. இதன் பின்னும், காய்கறி விலை பட்டியல் வெளியிடும் பணிகளை, அங்காடி நிர்வாக குழு துவங்கவில்லை. இதனால், எந்த அடிப்படையில் காய்கறி மொத்த விற்பனை மேற்கொள்ளப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, கோயம்பேடு அங்காடி வியாபாரிகள் கூறியதாவது:திருமழிசையில் அங்காடி செயல்பட்டாலும், அதற்கான விலையை முடிவு செய்ய வேண்டியது, அங்காடி நிர்வாக குழு தான். ஆனால், சில நாட்களாக, அங்காடி நிர்வாக குழுவின் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியல் வராதது, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுப்பதாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X