3,௦௦௦ குடும்பங்களுக்கு கபசுர குடிநீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3,௦௦௦ குடும்பங்களுக்கு கபசுர குடிநீர்

Added : மே 13, 2020
Share
முடிச்சூர் : குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், முடிச்சூரில், போலீசாருக்கு கையுறை, தானியங்கி கை கழுவும் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் உள்ள, கூட்டுறவு காலனியில், சமீபத்தில், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.தொடர்ந்து, கூட்டுறவு காலனி, லட்சுமி நகர், கொம்மியம்மன் நகர் விரிவு ஆகிய பகுதிகளில் வசிக்கும், 3,௦௦௦

முடிச்சூர் : குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், முடிச்சூரில், போலீசாருக்கு கையுறை, தானியங்கி கை கழுவும் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் உள்ள, கூட்டுறவு காலனியில், சமீபத்தில், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.தொடர்ந்து, கூட்டுறவு காலனி, லட்சுமி நகர், கொம்மியம்மன் நகர் விரிவு ஆகிய பகுதிகளில் வசிக்கும், 3,௦௦௦ குடும்பங்களுக்கு, முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இணைந்து, நேற்று, கபசுர குடிநீர் தயாரிக்கும் பொடி பாக்கெட்டுகள், இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், முடிச்சூர், காவல் உதவி மையத்தில் பணிபுரியும், பீர்க்கன்காரணை போலீசாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தானியங்கி கை கழுவும் இயந்திரம், முக கவசம், சானிடைசர் மற்றும் கையுறைகள் இலவசமாக வழங்கப்பட்டன.இதில், கூட்டமைப்பினர் காப்பாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X