பொது செய்தி

தமிழ்நாடு

மழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் அறிவுரை

Added : மே 13, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி,:தென்மேற்கு பருவமழை வரும், 16ம் தேதி முதல் துவங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். கமிஷனர் காந்திராஜ் முன்னிலை வகித்தார். தாசில்தார்கள் தணிகைவேல்,
 மழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் அறிவுரை

பொள்ளாச்சி,:தென்மேற்கு பருவமழை வரும், 16ம் தேதி முதல் துவங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். கமிஷனர் காந்திராஜ் முன்னிலை வகித்தார். தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், ஸ்ரீதேவி மற்றும் ராஜா, ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மழைக்காலங்களில் எந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகும் என்பது குறித்தும்; அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சப் - கலெக்டர் பேசியதாவது:பருவமழை காலம் துவங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மழைநீர் வழிந்தோட ஆக்கிரமிப்பு அகற்றி, கால்வாய்களை துார்வார வேண்டும்.தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தால், அங்குள்ளவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பு முகாம்கள் ஏற்படுத்த வேண்டும். மழையால் சாலைகள் பழுதடைந்தால் உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், மருத்துவ வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.வால்பாறை ரோட்டில் உள்ள மொத்தம், 40 கொண்டைஊசி வளைவுகளில், 20 வளைவுகளுக்கு ஒரு பொக்லைன் நிறுத்தி வைக்க வேண்டும்.சாலையோர வடிகால்களில், தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளுப்பாளையம் தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.வருவாய்துறை, உள்ளாட்சித்துறை என அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் கண்காணிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X