பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் 'மாஸ் கிளீனிங்'

Added : மே 13, 2020
Share
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், தனிமைப்படுத்தப்பட்ட, 103 கோயம்பேடு வியாபாரிகள் வசிக்கும் ஊராட்சிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணியும், 'மாஸ் கிளீனிங்' செய்யும் பணியும் நடந்து வருகிறது.

கோயம்பேடு வியாபாரிகளால், கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுதும், கோயம்பேடு வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.இதையடுத்து, கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகளிலும், கோயம்பேடு வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.இதில், கடம்பத்துார் ஒன்றியத்தில், 103 வியாபாரிகள், தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உட்பட, ஊராட்சி முழுதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.மேலும், ஊராட்சி முழுதும், 'மாஸ் கிளீனிங்' செய்யப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவும் பணியும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X