பொது செய்தி

தமிழ்நாடு

மின் விளக்கு பொறிகள் எளிமையாக அமைக்கலாம்

Added : மே 13, 2020
Share
Advertisement

மின் விளக்கு பொறி தயாரிப்பு குறித்து, கண்டி வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய பண்ணை நிர்வாகி முருகானந்தம் கூறியதாவது:எங்கள் பண்ணைக்கு சொந்தமான நிலத்தில், கீரை மற்றும் காய்கறிகளை ரசாயனம் இன்றி, இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.பொதுவாக, காய்கறி மற்றும் கீரைகளில், தீமை செய்யும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ரசாயன உரங்களை பயன்படுத்தினால், உணவுப்பொருள் நஞ்சாக மாறலாம்.அதனால், வீட்டில் கிடைக்கும், 'பிளாஸ்டிக்' கழிவு பொருட்களால், மின் விளக்கு பொறிகள் அமைத்துள்ளேன். இப்பொறி தயாரிப்பு குறித்து, தெரிந்தவர்களுக்கு கூறுகிறேன். ஒரு ஏக்கர் காய்கறி தோட்டத்திற்கு, மூன்று மின் விளக்கு பொறி அமைக்கலாம்.பூச்சிகளை கட்டுப்படுத்துவதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்க முடியும். தாய் அந்து பூச்சிகளின் தாக்குதல் குறைந்தால், காய்கறிகளில் கிடைக்கும் மகசூல், இழப்பீடு இன்றி பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்தொடர்புக்கு: 80985 02300

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X