பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் பயணம்

Added : மே 13, 2020
Share
Advertisement
 வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் பயணம்

ஆனைமலை:ஆனைமலை தாலுகா பகுதிகளில் இருந்து, வடமாநில தொழிலாளர்கள், 327 பேர், சொந்து ஊருக்கு சென்றனர்.ஆனைமலை தாலுகா பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுத்து, அவர்களில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோரை, வருவாய்த்துறையினர் வழியனுப்பி வருகின்றனர்.முதற்கட்டமாக கடந்த, 9ம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, 205 தொழிலாளர்களை அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், தென்னை நார் தொழிற்சாலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் கணக்கெடுத்து, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 181 தொழிலாளர்கள், பீகார் மாநிலத்தை சேர்ந்த, 146 பேரை கண்டறிந்தனர்.அவர்களை ஆனைமலை தாலுகா அலுவலகம் வரவழைத்து, உணவு, குடிநீர் கொடுத்து, சிறப்பு ரயிலில் ஊருக்கு செல்வதற்காக, பஸ்களில் அனுப்பி வைத்தனர்.கிணத்துக்கடவு கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நார் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தனியார் கம்பெனிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.ஊரடங்கு அமலில் உள்ளதால், வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இவர்கள் பீகார் மாநிலத்துக்கு செல்ல 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்தனர்.நேற்று, 161 பேரை மூன்று பஸ்களில், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, சிறப்பு ரயிலில் வழியனுப்பப்பட்டனர்.கிணத்துக்கடவில் இருந்து இரண்டாயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை, 658 பேர் பீகார் மாநிலத்துக்கு சென்றுள்ளனர். மற்றவர்கள், படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவர் என, வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X