தமிழ்நாடு

அதிகரிக்கும் வட மாநிலத்தவர் பலி; உணவு முறை அல்லது கொரோனா காரணமா?

Added : மே 13, 2020
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர், மூச்சுத்திணறலால், நேற்று, திடீரென இறந்தார். சமீப நாட்களாக, இது போன்று பலரும் இறந்துள்ளதால், உணவு முறை காரணமா அல்லது கொரோனா வைரஸ் காரணமா என, அச்சம் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், பிள்ளைப்பாக்கம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் என, ஆறு, 'சிப்காட்' தொழில் பூங்காக்கள் உள்ளன. இங்கு, வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி, பணி புரிகின்றனர்.கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, வீட்டிலேயே முடங்கியுள்ள இவர்களுக்கு, அரசு சார்பில் தங்கும் வசதி, மருத்துவம், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

வாடகை வீட்டில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் சிலர், சமீப காலமாக, கோழிக்கறி உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட்டு பலியாவது தொடர்கதையாக நடக்கிறது.ஏற்கனவே, நான்கு வட மாநிலத்தவர், வயிற்றுப்போக்கு, வாந்தி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே காட்டரம்பாக்கத்தில் வசித்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம்டாண்டி, 19, என்ற இளைஞர், நேற்று இறந்தார். கோழிக்கறி சாப்பிட்டு, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.அரசு அதிகாரிகள் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 17 ஆயிரம் வட மாநிலத்தவர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, இரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், யாருக்கும் கொரோனா இல்லை.ஏற்கனவே இறந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா இல்லை என, உறுதி செய்யப்பட்டது.

இறைச்சி உணவுகளை, சுகாதாரமற்ற முறையில் வைத்து சாப்பிடுவதால், இது போன்ற உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து, வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.அச்சம்கொரோனா அச்சம் உள்ள நிலையில், இறைச்சி உணவு சாப்பிட்டு, வட மாநிலத்தவர் இறப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில், சில மரணங்கள் தான் வெளியே தெரிகிறது; மற்றவை மறைக்கப்படுகின்றன. உண்மையில், இறைச்சி உணவு சாப்பிட்டு தான் இவர்கள் பலியானரா அல்லது கொரோனா தொற்று காரணமா என, அச்சமாக உள்ளது.சமூக ஆர்வலர்கள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X