பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெறும் வயது உயர்வு: ஆசிரியர் கழகம் வரவேற்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

கோவை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 59 ஆக உயர்த்தி கடந்த, 7ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதனை தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் வரவேற்றுள்ளது.இது தொடர்பாக, ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு கல்லுாரி ஆசிரியர்களின் பணி ஓய்வு உச்ச வரம்பை, யு.ஜி.சி., நெறிமுறைகளின்படி, 65 வயது அல்லது குறைந்தபட்சம் தமிழக பல்கலை ஆசிரியர்களுக்கு இணையாக, 60 ஆக உயர்த்த வேண்டும் என்று, கழகம் வலியுறுத்தி வந்தது. இதற்கு பயனளிக்கும் வகையில் தமிழக அரசு பணி ஓய்வு வயதை, 59 ஆக உயர்த்தியது மகிழ்ச்சியை தருகிறது.தமிழக அரசின் இந்த அரசாணையை பொறுத்தவரை, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், ஜாக்டோ-ஜியோ கருத்தில் இருந்து மாறுபடுகிறது.இன்றைய சூழலில் ஆசிரியர் பணிக்கு, தகுதி பெற்று நிரந்தர அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும், ஆசிரியரின் சராசரி வயது, 35-40 என்பதை கவனிக்க வேண்டும். இதனால், தமிழக அரசின் பணி ஓய்வு உச்சவரம்பு உயர்வை வரவேற்கிறோம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X