பொது செய்தி

தமிழ்நாடு

செல்வம் கொட்டும் கோ- 6 வெங்காயம்! புதிய கண்டுபிடிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

கோவை:ஜனவரி மாதம் உழவர் தினத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்ட, புதிய பயிர் ரகமான, கோ-6 ரகத்துக்கு விவசாயிகள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, கடந்த பதினைந்து ஆண்டு ஆராய்ச்சியின் பயனாக, 'கோ- 6' எனும் சிறிய வெங்காய ரகத்தை, கடந்த ஜனவரியில் வெளியிட்டது.இப்புதிய ரகம், அதிக விளைச்சலை கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் வாய்ந்தது. அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்கலாம். ஆனால் இதற்கு முந்தைய ரகமான, கோ -5, ஹெக்டேருக்கு, 14- 15 டன் வரை விளைச்சலை கொடுக்கும். கோ- 6 ரகம், 18- 19 டன் வரை விளைச்சலை கொடுக்கும்.விலை ஏற்ற இறக்கத்துக்கு தகுந்தவாறு, விவசாயிகள் பட்டறை அமைப்பு ஏற்படுத்தி, இருப்பு வைத்து விற்கலாம். அதனால் இப்புதிய ரகத்தை பயிரிட, தமிழ்நாடு வேளாண் பல்கலை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று, பல விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். பல்கலை விஞ்ஞானிகள் சொன்னபடி எதிர்பார்த்த அளவு விளைச்சலை கொடுத்திருந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.ஒரு குமிழுக்கு நுாறு முதல், 150 கிராம் வரை வெங்காயம் கொத்தாக கிடைத்துள்ளது. நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள், விதையாக சேமித்து வைத்துள்ளனர்.கோ- 5 ரகத்துடன் ஒப்பிடும்போது, இப்புதிய கோ-6 ரகம், எவ்வளவோ பரவாயில்லை. அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. என்ன... ஊரடங்கு காரணமாக எதிர்பார்த்த விலை இல்லை. இருந்தாலும் பட்டறையில் சேமித்து, எப்படியும் போட்ட காசை எடுத்து விடுவோம்.-கிட்டுச்சாமி, விவசாயி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X