பொது செய்தி

தமிழ்நாடு

மது வாங்க 'குடிமகன்கள்' வரவில்லை... ஆனால் ரூ.பல லட்சம் விற்பனை எப்படி?

Added : மே 13, 2020
Share
Advertisement

அன்னூர்;கடந்த 8ம் தேதி ஒரே நாளில், சில டாஸ்மாக் மதுக்கடைகளில், ஊழியர்கள் முறைகேடாக மது வகைகளை விற்று, பல லட்ச ரூபாய் வருமானம் பார்த்துள்ளனர்.தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 8ம் தேதி மாலையில், உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 7ம் தேதி மது பாட்டில்கள் எவ்வளவு விற்றதோ, அதைவிட, மூன்று மடங்கு அதிகமாக, 8ம் தேதி விற்பனை ஆகி இருந்தது.டாஸ்மாக் மதுக்கடைகளில், 7ம் தேதி ஒரு கி.மீ., தூரத்திற்கு வரிசை காணப்பட்டது. ஆனால் 8ம் தேதி அதில் கால்வாசி அளவு கூட, குடிமகன்கள் வரவில்லை. ஆனால் விற்பனை மூன்று மடங்கு ஆகியுள்ளது.கோவில்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில், 7ம் தேதி, 8 லட்ச ரூபாய்க்கும், 8ம் தேதி, 29 லட்சம் ரூபாய்க்கும் மது விற்றுள்ளது.பல கடைகளில், ஊழியர்களும், கட்சி பிரமுகர்களும் சேர்ந்து, பல ஆயிரம் மதுபாட்டில்களை வெளியே எடுத்துச் சென்றது அம்பலமாகியுள்ளது.இதுகுறித்து டாஸ்மாக் கோவை மண்டல முதுநிலை மேலாளர் பரமேஸ்வரியிடம் கேட்டபோது, ''இது குறித்து விசாரிக்கிறேன்," என்றார்,கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தாஜூதீனிடம் கேட்டபோது, "இரண்டாம் நாள் அதிகமாக மது விற்றது குறித்து, சூபர்வைசர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியவரும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X