பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் ராதாரவி வீட்டில் தனிமை: 'ஸ்டிக்கர்' ஒட்டிய அரசு அதிகாரிகள்

Added : மே 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 நடிகர் ராதாரவி வீட்டில் தனிமை:  'ஸ்டிக்கர்' ஒட்டிய அரசு அதிகாரிகள்

கோத்தகிரி;கோத்தகிரியில் நடிகர் ராதாரவி உட்பட, அவரது குடும்பத்தினர், எட்டு பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி எம்.கைகாட்டி மார்வளா பகுதியில், நடிகர் ராதாரவிக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு, தனது குடும்பத்தினருடன், கடந்த, 10ம் தேதி முதல் நடிகர் ராதாரவி தங்கியுள்ளார்.சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி ஆலோசனை படி, தாசில்தார் மோகனா, மருத்துவர் சுமித் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுதாகர் ஆகியோர், ராதாரவியின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து, எட்டு பேர் தங்கி வருவதை உறுதி செய்தனர்.
அப்போது, சென்னையில் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று வந்துள்ளதாக அதிகாரிகளிடம், ராதாரவி தெரிவித்தார். இருப்பினும், 'வீட்டில் தங்கியுள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதற்கு ஒத்துழைப்பதாக கூறிய ராதாரவியும், அவரது குடும்பத்தினரும் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தனர்.இதையடுத்து, வீட்டில் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு, எட்டு பேரையும் தனிமைப் படுத்தி,'வீட்டில் இருந்து வெளியே செல்லக்கூடாது' என, அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்க ஏதுவாக, தன்னார்வலர் பணியமர்ந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
14-மே-202021:27:45 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி அப்படியானால் ராதாரவி குடும்பத்தில் யாருக்கேனும் கொரானா தோற்று உள்ளதா? அவர்கள் நலமுடன் வர இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
S Madhavan - chennai,இந்தியா
14-மே-202010:28:40 IST Report Abuse
S Madhavan கோட்டையில் வெயில் தவிர்த்து, உள்ளதா சுகமான குளிர் தேடிச் சென்றுள்ளனர் போலும். சென்னைக்கு வெளியே சென்றால் கொரோனா பரவல் தனக்கு வராமல் இருக்கவும் சென்றிருக்கலாம். ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X