பொது செய்தி

தமிழ்நாடு

15 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க., சார்பில் நிவாரணம்

Added : மே 13, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியனில் வசிக்கும், 15 ஆயிரம் நலிவடைந்த குடும்பங்களுக்கு, தி.மு.க., சார்பில் கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் வழங்குவதை, மாவட்ட செயலாளர் முத்துசாமி, 46 புதூர் பஞ்சாயத்து, ஆணைக்கல்பாளையத்தில் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து லக்காபுரம், நஞ்சை ஊத்துக்குளி, குதிரைப்பாளி உள்ளிட்ட இடங்களில் நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். பின்னர் அந்தந்த பஞ்சாயத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள், அனைத்து தரப்பு நலிவடைந்த மக்களுக்கும் சில்வர் தட்டு, கோதுமை, ரவை, சமையல் எண்ணெய், பிஸ்கட் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய உணவுப்பொருட்கள் பைகளை வழங்கி வருகின்றனர். ஈரோடு மாநகரில் மட்டும், 90 ஆயிரம் குடும்பங்களுக்கு, இதுவரை கொரோனா நிவாரண பொருட்களை, தி.மு.க., மாவட்ட செயலாளர் முத்துசாமி, கட்சி நிர்வாகிகளுடன் வழங்கியுள்ளார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், அவல்பூந்துறை செயலாளர் சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X