சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்; கணவர் புகார்

Added : மே 13, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், மனைவியை காணவில்லை என்று, கணவர் புகார் செய்துள்ளார். ஈரோடு, பெரியசேமூர், கல்லாங்கரடு, ராம் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவர் மனைவி கனகா, 23; மணமாகி ஏழு ஆண்டு ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளன. ராஜ்குமார் தன் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வாழ்கிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். ஓராண்டுக்கு முன், கணவரிடம் கோபித்து கொண்டு, சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கனகா சென்றார். மூன்று மாதங்களுக்கு முன் சமாதானம் செய்து, ராஜ்குமார் அழைத்து வந்தார். ஆனாலும், வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 11ம் தேதி காலை, வீட்டில் இருந்த கனகா மாயமானார். உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. வீரப்பன்சத்திரம் போலீசில் ராஜ்குமார் செய்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிந்து, கனகாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X