பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையிலிருந்து காட்பாடி வந்த இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

Added : மே 13, 2020
Share
Advertisement

வேலூர்: சென்னையிலிருந்து காட்பாடி வந்த இன்ஸ்பெக்டருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர், சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேலூர் காட்பாடி, வி.ஜி.ராவ் நகரை சேர்ந்த, 52 வயதுடையவர் சென்னை, ஆவடி பட்டாலியனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அவர், அடிக்கடி காட்பாடி வந்து செல்வார். இந்நிலையில், ஆவடி பட்டாலியனில் உள்ள போலீசாருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அவர் காட்பாடி வந்துள்ளார். தகவலின்படி, வேலூர் சுகாதாரத்துறையினர், அவரை வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் வசித்த, வி.ஜி.ராவ் நகர் முழுவதையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X