பொது செய்தி

தமிழ்நாடு

குவார்ட்டர் பாட்டில் ரூ.500 ஒரு லிட்டர் சாராயம் ரூ.2,000

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், குவார்ட்டர் மதுபாட்டில், 500 ரூபாய், ஒரு லிட்டர் சாராயம், 2,000 ரூபாய் என, கனஜோராக விற்பனை நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அரசு உத்தரவுபடி, கடந்த, 7ல், கொரோனா பாதிப்பு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள, 166 கடைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாட்கள் செயல்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி, 9ல் மூடப்பட்டன. மாவட்டத்தில், இரண்டு நாட்களில், 11.75 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனையானது. இந்நிலையில், பெரும்பாலான மதுபாட்டில்கள், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள், பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருகின்றனர். இதில், ஒரு குவார்ட்டர் பாட்டில், 500 ரூபாய், ஒரு கட்டிங், 250 ரூபாய் என விற்பனை செய்து வருகின்றனர். இதேபோன்று, கள்ளச்சாராயத்தை மொத்த வியாபாரிகள், ஒரு லிட்டர், 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். போலீசார் அதிரடியாக கள்ளச்சாராய வேட்டை நடத்தி ஒழிப்பு பணியில் ஈடுபட்டாலும், கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202009:51:18 IST Report Abuse
ramkumar this type of society will ultimately ruin itself and it can never progress.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X