சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

போலி செய்தி வெளியிடுவது பத்திரிகை சுதந்திரம் அல்ல!

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
press freedom, media ethics, prakash javadekar, india,
போலி செய்தி, பத்திரிகை சுதந்திரம்,பிரகாஷ் ஜாவேத்கர்,
மத்திய அமைச்சர்

ஒரு நாட்டில் பத்திரிகை சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது, எப்போதும் விவாதத்துக்கு உள்ளானதாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவில், 1975 ஜூன் மாதம் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது.அந்த நேரத்தில் நாங்கள், மாணவர் செயற்பாட்டாளர்களாக இருந்தோம். பத்திரிகை செய்திகள் தணிக்கைக்கு எதிராக நாங்கள், சத்யாகிரகப் போராட்டம் நடத்தினோம்.


ஒரே சட்ட விதி


அதற்காக, 1975 டிசம்பர் 1௧ல் கைது செய்யப்பட்டோம். அனைத்து அரசியல் கைதிகளும், 1977 ஜனவரி 26ல், விடுதலை செய்யப்படும் வரை, நாங்களும் சிறையில் வைக்கப்பட்டிருந்தோம். அந்தக் காலகட்டத்தில் தணிக்கைதான் ஒரே சட்ட விதிமுறையாக இருந்தது! ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஓர் அரசு அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அடுத்த நாள் என்ன செய்திகள் வெளியிடப்படும் என்பதை, அந்த அதிகாரி பார்ப்பார். எந்தக் காரணமும் சொல்லாமல், ஒரு செய்தியை நீக்குவதற்கு அவருக்கு வரம்பற்ற அதிகாரம் தரப்பட்டிருந்தது. பாலகங்காதர திலக் தொடங்கிய, 'டெய்லி கேசரி' பத்திரிகையில், உதவி ஆசிரியராக இருந்த என் தந்தை, ஜூன் 25 ஆம் தேதி, இரவுப் பணியில் இருந்தார். அன்றைய இரவில் தான், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் எப்படி பறிபோனது என்பதை,அடுத்த நாள் காலை, அவர் விவரித்தார். சிந்தனைச் சுதந்திரம், பேச்சுரிமை, நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் அல்லது பத்திரிகை சுதந்திரம் என அனைத்து சுதந்திரங்களும் மறுக்கப்பட்டன.அதுதான் இந்திய ஜனநாயகத்தில் மிகவும் கருப்பான காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில், அனைத்து சுதந்திரங்களையும் மீட்டுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை .அவசரநிலைஎந்த நபரின் உயிரைஎடுப்பதற்கும், ஆட்சியாளர்களுக்கு உரிமை உள்ளது என்று சொல்லும் அளவுக்கு,நீதிமன்றங்கள் சென்றன. அப்போதைய அட்டர்னி ஜெனரலாக இருந்த நிரேன் தே, முன்வைத்த வாதம் அப்படி தான் இருந்தது. நீதிமன்றங்களும் அதை ஏற்றன.கிட்டத்தட்ட, 18 மாதங்களாக பல கோடி மக்கள் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராகப் போராடினாலும், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இருண்ட காலகட்டம் தொடர்ந்து நீடித்தது; அதுவே சட்டத்தின் ஆட்சி முறையாக மாறிவிட்டது. அவசரநி லைப் பிரகடனம் நீக்கப்பட்டு, 1977ல் நடந்த தேர்தலில், ஜனதா கட்சி வெற்றி பெற்றது. பத்திரிகை சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்துவது என்பதுதான்,அந்த அரசு எடுத்த முதலாவது முடிவு. அப்போதிருந்து அதற்கு எந்தத் தடையும்இருக்கவில்லை.


புதிய போக்கு


இருந்தபோதிலும், சமீப காலமாக, போலிச் செய்திகளை வெளியிடும் போக்கு காணப்படுகிறது. தவறாக வழிநடத்துதல், மக்கள் மத்தியில் குழப்பங்கள் மற்றும் அமைதிக்குலைவை ஏற்படுத்தும் செயல்களில், தெரிந்தே செயல்படும் புதிய போக்கு காணப்படுகிறது.முடக்கநிலை காலத்தில், அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களிலும், 'டுவிட்டர், பேஸ் புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களிலும், போலிச் செய்திகள் பரவும் போக்குஅதிகரித்து வருகின்றன.இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, பி.ஐ.பி., என்றழைக்கப்படும், பத்திரிகை தகவல் மையத்தில், 'உண்மை கண்டறியும் பிரிவு' ஒன்றை நாங்கள் தொடங்கினோம்.போலிச் செய்திகளை அந்தப் பிரிவு உடனடியாகக் கண்டறிந்து மறுப்பு தெரிவிக்கும்.இந்தக் குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு, நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

பல தொலைக்காட்சி சேனல்களும், பத்திரிகைகளும், இத்தகைய போலிச் செய்திகளைத் திரும்பப்பெறவேண்டியதாயிற்று.தங்களுடைய நேயர்கள்மற்றும் வாசகர்கள் முன்னிலையில், திருத்தங்களை வெளியிட்டு, மன்னிப்பு கோரும் நிலையும்ஏற்பட்டது.


தவறான விமர்சனம்


போலிச் செய்திகள் பரவுதலைத் தடுக்க, இந்திய அரசு, இந்த ஆக்கப்பூர்வ முயற்சியை மேற்கொண்டுள்ள நிலையில், 'இது, பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்கும் முயற்சி' என்று சிலர், தவறாகவிமர்சனம் செய்கின்றனர்.பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில், போலிச் செய்திகளைப் பரப்புவது சரியானதாஎன்ற எளிய கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். இதற்கு எளிதான பதில், 'இல்லை, அது பத்திரிகை சுதந்திரம் கிடையாது' என்பதுதான்.இங்கே நான் சில உதாரணங்களை முன்வைக்கவிரும்புகிறேன்...

* உணவு இல்லாததால் ஒரு பெண், தன் ஐந்து குழந்தைகளை, கோமதி ஆற்றில் வீசிவிட்டதாக, உத்தரப்பிரதேசத்தில் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர், 'டுவிட்டரில்'போலிச் செய்தி பதிவிட்டார். ஆனால், உண்மை நிலையைப் பரிசோதித்தபோது, அந்தப் பெண்ணின் வீட்டில் போதிய உணவுப் பொருள்கள் இருந்தன என்பதும், சமைத்த உணவும் கூட இருந்தது என்பதும் தெரிய வந்தது. தன் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, அந்தப் பெண், இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. பட்டினி காரணமாக அவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர் என்பது, பொய்யின்றி வேறு எதுவும் கிடையாது.

* ஆமதாபாத் நகர் மருத்துவமனையில், மதத்தின் அடிப்படையில் நோயாளிகளைப் பிரித்து வைத்து, சிகிச்சை தரப்படுவதாக, இன்னொரு போலிச் செய்தி, 'டுவிட்டரில்' பதிவிடப்பட்டது. அதுவும் தவறானது என்று கண்டறியப்பட்டது; அது பொய்ச் செய்தி என, அம்பலப்படுத்தப் பட்டது.
* மும்பை பாந்த்ரா ரயில் நிலையப் பகுதியில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்குலைக்கும் வகையிலான ஒரு போலிச் செய்தி, சமூக வலைதளங்களில் பரவியது. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் விடப்படுவதாக போலிச் செய்தி பரவியதால், ஏராளமானவர்கள், பாந்த்ரா ரயில் நிலையப் பகுதியில் திரண்டனர். அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படவில்லை.

* மற்றொரு சம்பவத்தில், ராஜஸ்தானில் பிக்கானீர் அரசு மருத்துவமனையில், அனைத்து அலுவலர்களுக்கும் கோவிட் -19 நோய் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக, பிரபலமான ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அது முழுக்க முழுக்கத் தவறானது என்று, உண்மை நிலவரத்தை தெரிவித்த போது, அந்த போலிச் செய்தியை அவர்கள் வாபஸ் பெற வேண்டியதாயிற்று.


வாபஸ்


வதந்திகளை செய்திகள் என்று கூறி பரப்பும் போக்கு காணப்படுவதையும், நாங்கள் கவனித்து வருகிறோம்.குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளை, சிறுமைப்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்புவதைக்கவனிக்கிறோம்.

* ரேஷன் கடைகளில் ஏழைகளில், 2 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவுகிடைக்கிறது
* நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருள்கள் இல்லை
* அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்செய்யப்படும்
* இந்த இணையதள சுட்டியில், 'கிளிக்' செய்தால்,அரசு, 1000 ரூபாய் அளிக்கும்
* ஜூன் மாத இறுதி வரை, அரசு இலவசமாக இன்டர்நெட் வசதி அளிக்கும்
* அக்டோபர் இறுதி வரையில் ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கும் - என்பது போன்ற வதந்திகள் பரவலாக பரப்பப்பட்டன. ஆனால் இவையெல்லாம் தவறானவை என்று கண்டறியப்பட்டு, உண்மையை தெரிவித்த பிறகு, இவை வாபஸ் பெறப்பட்டன.


அச்சம்


போலிச் செய்திகளில் இன்னொரு பயங்கரமான போக்கும் உள்ளது. அது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோ க்வின் மாத்திரைகளை, இந்தியா ஏற்றுமதி செய்தபோது, இந்திய மக்களுக்குத் தேவைக்கான இந்த மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்பதாக, ஒரு போலிச் செய்தி பரவியது.

*தமிழகம் ஆர்டர் கொடுத்தமருத்துவப் பரிசோதனைஉபகரணங்கள் அமெரிக்காவுக்குத் திருப்பி விடப்பட்டன
* ஈஷா அறக்கட்டளை வளாகத்தில், 150 வெளிநாட்டவர்களுக்கு கோவிட் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது
* தமிழகத்தின் திருப்பூரில், 30 ஆயிரம் ஆயத்த ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்
* மும்பையில் சமுதாய அளவில் நோய் பரவத் தொடங்கிவிட்டது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
* ஜம்மு காஷ்மீரில், மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறை உள்ளது
* மணிப்பூரில் சுரா சாண்ட்பூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் இல்லை- இப்படிப்பட்ட போலிச் செய்திகளும் பரவின.

'மும்பையில் கோவிட் நோயால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, ஏப்ரல் மாத இறுதிக்குள், 40 ஆயிரம் ஆக அதிகரிக்கும்; மே மத்தியில், 6.5 இலட்சமாக அது அதிகரிக்கும்' என்று, பிரபல செய்தித்தாள், செய்தி வெளியிட்டது.இவை அனைத்துமே தவறானவை என, கண்டறியப்பட்டவைகளில் முக்கியமானவை. இவற்றை அவர்கள் திரும்பப் பெற வேண்டிய நிலைஏற்பட்டது.நாங்கள் உண்மை நிலையைக் கண்டறிந்து உடனுக்குடன் மறுப்பு தெரிவிக்காமல் போயிருந்தால், போலிச் செய்திகளைப் பரப்பும் இந்தப் போக்கு, தடங்கல் இல்லாமல் தொடர்ந்திருக்கும்.

பல போலிச் செய்திகளை பரப்புவதில், சதித் திட்டங்கள் உள்ளன.'இமாச்சலப் பிரதேசத்தில் பால் விநியோகம் செய்த முஸ்லிம் குஜ்ஜார்களுக்கு,அனுமதி மறுக்கப்பட்டது; மணிப்பூர் மாநிலம் டாமெங்லாங் மாவட்ட மருத்துவமனையில், அலுவலர்களோ அல்லது சாதனங்களோ இல்லை' என்று ஒரு போலிச் செய்திபரவியது.இவை கூட தவறானவை என நிரூபிக்கப்பட்டன.


உண்மை அறிதலின் பதிவு


பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை அறியும் எங்கள் பிரிவின் உண்மை அறிதலின் பதிவுகள் இவை. 'என்ன கிடைத்தது, கண்டறிந்தவை என்ன' என்பது தான்,என்னுடைய எளிமையான கேள்வி.'போலிச் செய்திகளைஉருவாக்க வேண்டும்என்பதற்காக, தெரிந்தே முயற்சி மேற்கொள்ளப்பட்டது' என்பது தான், இதற்கான பதிலாக உள்ளது.பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில், போலிச் செய்திகளைப் பரப்புவதை, எல்லாரும் ஒப்புக் கொள்ள முடியாதுஎன்பது, நிச்சயமாகஎனக்குத் தெரிகிறது!
பிரகாஷ் ஜாவேத்கர்
மத்திய அமைச்சர்
கட்டுரையாளர் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்; தகவல் ஒலிபரப்புத்துறை, கனரக தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் அமைச்சர். கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை, இவருவைய சொந்தக் கருத்துகள்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
13-மே-202014:34:40 IST Report Abuse
konanki 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றிக்கு தமிழ் நாட்டின் ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்களின் பங்கு மிக அதிகமானது/முக்கியமானது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
13-மே-202014:28:30 IST Report Abuse
konanki ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் ரெட் லைட் மாதிரி செயல்படுகிறது என்ற வரலாற்று உண்மையை சொன்ன போது தமிழ் நாட்டின் எந்த ஊடகமும் சேனல்கள் நெறியாளர்கள் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஊடகங்களை கைக்குள் வைத்து கொள்வதில் (media management) இந்தியாவிலேயே ஆகச் சிறந்த கட்சி திமுக தான். இதை மிகவும் தொலை நோக்குடன் professional அணுகு முறையில் செய்து வெற்றி கண்டுள்ளது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
13-மே-202014:18:05 IST Report Abuse
konanki தமிழக சேனல்கள் நெறியாளர்கள் ஊடகங்கள் அத்தனையும் செய்திகளை திரித்து இடது சாரி சிந்தனையாளர்கள் அர்பன் நக்ஸல்கள் காசுக்காக டிவியில் பொய் பிரச்சாரம் செய்யும் போலி ஆசாமிகள் சமூக ஆர்வலர்கள் என்ற முகமுடியில் இருக்கும் தேச விரோதிகள் துணை கொண்டு செய்திகளை திரித்தும் ஒரு தலைபட்சமாகவும் அறமற்ற முறையில் நித்தமும் செய்து வருகின்றனர். ஓரு உதாரணம். சென்னை IIT யில் ஒரு மாணவரின் தற்கொலை யை பூதாகாரமாக ஊதி அந்த பேராசிரியரை குற்றவாளி் என்று் தீர்ப்பு என்று கூறிய சானல் ஏன் போலீஸ் இன்னும் அவரை கைது செய்யவில்லை ? வழக்கு விசாரணை CBI க்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து 10 நாள் விவாதம் நடத்தியது. ஆனால் இதே சென்னையில் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது அதை ஓரு வரி செய்தியாகக் கூட சொல்லவில்லை. செய்தியே சொல்ல வில்லை என்றால் விவாதங்கள் ஏது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X