சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை: தி.மு.க., பிரமுகரின் கணவர் கைது

Added : மே 13, 2020
Share
Advertisement

சேலம்: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற, தி.மு.க., பெண் பிரமுகரின் கணவர் உள்பட, இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சிலர் வீடுகளிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை தடுக்க, சேலம், மேற்கு சரகத்தில், உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், இரும்பாலை, காமராஜர் நகரில், வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்ற சுரேஷ், 36, அவரது கூட்டாளியான குமார், 38, ஆகியோரை, நேற்று கைது செய்த தனிப்படையினர், 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். சுரேஷின் மனைவி சுகவனேஸ்வரி, இரும்பாலை, ஆறாவது வார்டு தி.மு.க.,வின் உறுப்பினராக உள்ளார்.

பதுக்கிவைப்பு: கொளத்தூர், பாலமலை ஊராட்சி, குள்ளம்பட்டி கூலித்தொழிலாளி விஜயகுமார், 37. இவர், 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம் ஆய்வு செய்த போலீசார், சாராயத்தை பறிமுதல் செய்து, விஜயகுமாரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X