பென்னாகரம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பென்னாகரம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு

Added : மே 13, 2020
Share

பென்னாகரம்: பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், பணியின் போது செவிலியரை, டாக்டர் தாக்கியதாக கூறி நேற்று, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.
பென்னாகரம் மருத்துவமணை கடந்த, 2011ல், இருந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், நூற்றுக்கனக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, 40 நிரந்தர செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், நோயாளிகளின் மேல்சிகிச்சை அறிக்கையை சரியாக எழுதவில்லை, என அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர், செவிலியரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த செவிலியர்கள் நேற்று காலை பணி புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்குள்ள டாக்டர்கள், செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட டாக்டர், செவிலியரிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து, செவிலியர்கள் பணிக்கு திரும்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X