பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் பொருட்கள் வாங்க வெளியில் வரலாம்

Added : மே 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தர்மபுரி நகராட்சி பகுதியில், புதிய நடைமுறைகள் வரும், 15 முதல் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். அதன்படி, தர்மபுரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்வதற்காக, வார்டு, வாரியாக ஒவ்வொரு வீடுகளுக்கும், நகராட்சி அலுவலகத்தின் மூலம் அனுமதி அட்டை வழங்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவர். 15 வயதிற்கு மேல், 55 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதி அட்டையை பயன்படுத்தி வெளியில் வர அனுமதிக்கப்படுவர். பொருட்களை வாங்க வெளியில் வருபவர்கள் அனுமதி அட்டையுடன், தங்களின் அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும். ஒன்று முதல், 11 வார்டு வரை அனுமதி அட்டை இளஞ்சிவப்பு, திங்கள், வியாழன் மட்டும் வெளியில் வரலாம். வார்டு, 12 முதல், 22 வரை, நீலம், செவ்வாய், வெள்ளி மட்டும் வரலாம். வார்டு, 23 முதல், 33 வரை மஞ்சள் அட்டை வழங்கப்படும். இவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பொருட்கள் வாங்க வெளியில் வரலாம். அரசு அலுவலர்கள் அலுவலக அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பலசரக்கு மொத்த, சில்லரை வியாபாரிகள், தர்மபுரி நகரத்திற்கு பொருட்கள் வாங்க வரும்போது, மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டுடன் வர வேண்டும். நகர பகுதியில் காய்கறி, பழம், பூ, மொத்த, சில்லரை வியாபாரிகள் வேளாண்மைத்துறை வழங்கியுள்ள அனுமதி சீட்டுடன் வர வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றி, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X