பொது செய்தி

தமிழ்நாடு

மாரண்டஹள்ளி பஜார் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Added : மே 13, 2020
Share
Advertisement

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களிடமிருந்து, 2.6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை, டவுன் பஞ்., அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், அதை உபயோகப்படுத்தவும் கூடாது என, தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பஜார் பகுதியில் டவுன் பஞ்., செயல் அலுவலர் காதர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பஞ்சப்பள்ளி ரோடு, கடைவீதி பகுதிகளில் உள்ள, நான்கு கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதன்படி, 2.6 கிலோ, எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதை, வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு, 1,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடைக்காரர்கள் தொடர்ந்து இதேபோல், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X