பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விலகலை கடைப்பிடிக்காததால் முன்னாள் ராணுவ வீரர்கள் கேன்டீனை மூட உத்தரவு

Added : மே 13, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: சமூக விலகலை கடைப்பிடிக்காததால், வரும், 31 வரை கிருஷ்ணகிரியில் உள்ள, முன்னாள் ராணுவ வீரர்கள் கேன்டீனை மூட, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள, முன்னாள் படை வீரர்கள், சலுகை விலையில் பொருட்களை பெற பெங்களூரு சாலையில் கேன்டீன் உள்ளது. இங்கு, 8,000க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் கேன்டீன் மூடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த, 10 முதல் மீண்டும் கேன்டீன் திறந்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இது குறித்த தகவலின்படி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொருட்களை வாங்க கேன்டீன் முன் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கேன்டீன் நிர்வாகம், ஒரு நாளைக்கு, 150 பேர் மட்டும் பொருட்களை வாங்க, சென்னை சாலையில் உள்ள ஒரு திருமண மண்படத்தில் டோக்கன் வழங்கினர். இதனால், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டோக்கன் பெற குவிந்தனர். அவர்களில் பலர், முகக்கவசம் கூட அணியாமல், சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதியபடி, 2,000க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். இதையறிந்த, மாவட்ட கலெக்டர் பிரபாகர், கேன்டீனை வரும், 31 வரை மூட உத்தரவிட்டார். இதனால், டோக்கன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X