பொது செய்தி

தமிழ்நாடு

'வட மாநிலத்தை சேர்ந்த 600 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு'

Added : மே 13, 2020
Share
Advertisement
நாமக்கல்: ''வடமாநிலத்தை சேர்ந்த, 600 பேர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,'' என, கலெக்டர் மெகராஜ் கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்திலிருந்த, வடமாநிலங்களை சேர்ந்த, 600 பேர், அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து, 860 பேர், நாமக்கல் வருவதற்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில்

நாமக்கல்: ''வடமாநிலத்தை சேர்ந்த, 600 பேர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,'' என, கலெக்டர் மெகராஜ் கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்திலிருந்த, வடமாநிலங்களை சேர்ந்த, 600 பேர், அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து, 860 பேர், நாமக்கல் வருவதற்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் இதுவரை, 400 பேர் வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து, சேலம் மாவட்டத்துக்கு, ஜவுளி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல, அம்மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளேன். மாவட்டத்தில், 21 நோய் தடுப்பு மண்டலங்களில், நான்கு நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X