விசைத்தறி கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு

Added : மே 13, 2020
Share
பள்ளிபாளையம்: ஊரடங்கு உத்தரவால், பள்ளிபாளையம் நகராட்சியில், கடந்த, 45 நாட்களுக்கு மேலாக விசைத்தறி கூடங்கள் செயல்படவில்லை. விசைத்தறியாளர்கள், கலெக்டர் மெகராஜை சந்தித்து, 'விசைத்தறி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கவேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். நேற்று, மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், விசைத்தறி கூடங்களில் ஆய்வு நடத்தினர்.பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க

பள்ளிபாளையம்: ஊரடங்கு உத்தரவால், பள்ளிபாளையம் நகராட்சியில், கடந்த, 45 நாட்களுக்கு மேலாக விசைத்தறி கூடங்கள் செயல்படவில்லை. விசைத்தறியாளர்கள், கலெக்டர் மெகராஜை சந்தித்து, 'விசைத்தறி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கவேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். நேற்று, மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், விசைத்தறி கூடங்களில் ஆய்வு நடத்தினர்.
பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது: மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர், விசைத்தறி கூடங்களை ஆய்வு செய்தார். 10 தறிகள் உள்ள விசைத்தறி கூடத்தில் இரண்டு பேர் மட்டும் வேலை செய்வோம். எனவே, விசைத்தறிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X