பொது செய்தி

தமிழ்நாடு

2,000 மனுக்கள் கலெக்டரிடம் வழங்கல்

Added : மே 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை கோரி, பொறுப்பாளர் ராஜேஷ்குமார், செயலாளர் மூர்த்தி ஆகியோர், கலெக்டர் மெகராஜிடம் மனு அளித்தனர். அதையடுத்து, அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 50 நாள்களாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், 'ஒன்றிணைவோம் வா' என்ற அடிப்படையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கினோம். மேலும், தி.மு.க.,வின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு, பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. அதனடிப்படையில் பெறப்பட்ட, 2,000 மனுக்கள், இரு மாவட்ட நிர்வாகிகள் சார்பில், நாமக்கல் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X