பொது செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையம் தொழிலாளர்கள் 33 பேர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மீட்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் நிறுவனங்களை சேர்ந்த, வெளி மாநில தொழிலாளர்கள், 33 பேர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மீட்கப்பட்டனர். இதுகுறித்து, தாசில்தார் தங்கம் கூறியதாவது: குமாரபாளையம் அருகே, காவேரி உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா, குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் பணியாற்றி வந்த, வடமாநில இளைஞர்கள், 33 பேர், நேற்று முன்தினம் இரவு, தொழிற்சாலையினர் அனுமதியில்லாமல், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் சென்றுள்ளனர். அங்கு இவர்களை விசாரித்த ஈரோடு போலீசார், அவர்களை ஏற்கனவே பணியாற்றிய தொழில்நுட்ப பூங்காக்களில் கொண்டு வந்து விட்டு சென்றனர். தகவலறிந்த திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., மணிராஜ், தொழிற்சாலை வளாகத்திற்கு வந்து, நிர்வாகிகளிடமும், தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, 'தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும்' என, உறுதியளித்தார். இது தவிர, மாலத்தீவிலிருந்து வந்த இருவர், குமாரபாளையம் சோதனைச் சாவடியில் போலீசாரால் பிடிக்கப்பட்டு, மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X