சாலையில் விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு

Added : மே 13, 2020
Share

கொல்லிமலை: கொல்லிமலையில் வீசிய பலத்த காற்றால், சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, பொது வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ், சுகாதாரம், வேளாண்மை, வருவாய் துறை உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் வந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கொல்லிமலையில் பலத்த காற்று வீசியது. இதில், செம்மேட்டில் இருந்து சோளக்காடு செல்லும் வழியில், சாலையோரம் இருந்த பெரிய மரத்தின் கிளை சாலை நடுவே விழுந்தது. கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியினர் மரக்கிளையை அகற்றி சாலையோரம் தள்ளினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. பலத்த காற்று வீசினாலும், மழை பெய்யவில்லை. தூறலுடன் மழை நின்றது. திடீர் காற்றால், மிளகு எடுக்கும் பணி, காயவைக்கும் பணி பாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X