சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலிக்குடங்களுடன் பொது மக்கள்: யூனியன் அலுவலகம் முற்றுகை

Added : மே 13, 2020
Share
Advertisement

குளித்தலை: க.புதூரில் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்திட வலியுறுத்தி, அப்பகுதி பொது மக்கள் காலிக் குடங்களுடன், 5 கி.மீ., தூரம் நடந்து வந்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., க.புதூரில், 70 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த, 15 நாட்களாக குடிநீர் போர்வெல் கேட்வால்வை அடைத்து வேறு பகுதிகளுக்கு, பாரபட்சமாக பஞ்., நிர்வாகத்தினர் குடிநீர் சப்ளை செய்து வந்ததால், க.புதூர் பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று காலை, 11:00 மணியளவில் காலிக் குடங்களுடன் 5 கி.மீ., தூரம் நடந்தே வந்து, தோகைமலை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தோகைமலை யூனியன் கமிஷனர் ராஜேந்திரன், யூனியன் மேலாளர் ரவிசந்திரன் மற்றும் தோகைமலை போலீசார், மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X