சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே மோதல்: 9 நபர் மீது வழக்குப்பதிவு

Added : மே 13, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., கூடலூரை சேர்ந்தவர் முருகன் மகன் தீபன், 25, இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் புகழேந்தி என்பவருக்கும் வீடு கட்டுவதில் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த, 10ல் மாலை தீபன் தனது பகுதியில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது தீனா, புகழேந்தி, வினோத் குமார் ஆகியோர் தீபன் மற்றும் அவரது குடும்பத்தாரை கையால் தாக்கியதோடு கொலை செய்வதாக மிரட்டினர். இதில் தீபன் கொடுத்த புகாரின் படி, மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில், கூடலூரை சேர்ந்த புதுராஜா மகன் வினோத்குமார், 23, என்பவர் கொடுத்த புகார்படி சக்திவேல், குணசேகரன், பாலா, தீபன், ரவி, சக்திவேல்,ஆகிய ஆறு பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X