நோ-பார்க்கிங் பகுதியில் மீண்டும் வாகனங்கள்| Dinamalar

நோ-பார்க்கிங் பகுதியில் மீண்டும் வாகனங்கள்

Added : மே 13, 2020
Share

கரூர்: கரூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த, நோ-பார்க்கிங் பகுதியில், நேற்று மீண்டும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டன. அதை, போலீசார் கண்டுகொள்ளாததால், நெரிசல் ஏற்பட்டது.
கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை சுற்றி, கோவை சாலை, திருச்சி சாலை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் ஜவஹர் பஜார் சாலைகள் உள்ளன. இந்த பகுதிகளில், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, பெரும்பாலான ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்சி ஸ்டோர்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப் படவில்லை. இதனால், வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், அடிக்கடி நெரிசலில் சிக்குவதால், நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் சற்று தளர்வு அறிவிக்கப்பட்டதால், நேற்று கரூர் நகரப்பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதனால், கரூர் நகர்ப்பகுதிக்கு வந்த கார் உள்ளிட்ட வாகனங்கள், நோ-பார்க்கிங் என போலீசாரால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பலமணி நேரம் நிறுத்தப்பட்டன. இதை கரூர் நகர போலீசார், கண்டு கொள்ளவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X