கைது செய்யுங்கள்: சவால் விடும் எலன் மஸ்க்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கலிபோர்னியா: ஊரடங்கு உத்தரவை மீறி டெஸ்லா தொழிற்சாலையை திறந்த தொழிலதிபர் எலன் மஸ்க், வேண்டுமென்றால் தன்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.டெஸ்லா கார் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் கோடீஸ்வரருமான எலன் மஸ்க், ஊரடங்கு உத்தரவை மீறி ப்ரமோண்ட் நகரில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், ‛அலமேடா மாகாணத்தின் விதிகளை மீறி
Elon Musk, Tesla, elon musk news
எலன்மஸ்க், டெஸ்லா, ஊரடங்கு, விதிமீறல், கைது, செய்யுங்கள்

கலிபோர்னியா: ஊரடங்கு உத்தரவை மீறி டெஸ்லா தொழிற்சாலையை திறந்த தொழிலதிபர் எலன் மஸ்க், வேண்டுமென்றால் தன்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

டெஸ்லா கார் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் கோடீஸ்வரருமான எலன் மஸ்க், ஊரடங்கு உத்தரவை மீறி ப்ரமோண்ட் நகரில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், ‛அலமேடா மாகாணத்தின் விதிகளை மீறி டெஸ்லா மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்கிறது. அங்கு மற்றவர்களுடன் நானும் இருப்பேன். யாரையாவது கைது செய்ய வேண்டுமென்றால் என்னை மட்டும் கைது செய்யுங்கள்,' என பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கை மீறியதற்காக மஸ்க்குடன் அலமேடா மாகாண அரசு அதிகாரிகளும், ப்ரேமோண்ட் நகர போலீசும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.


latest tamil news


முன்னதாக கடந்த வாரம் மாகாணத்தின் விதிகளுக்கு எதிராக மஸ்க் வழக்குத் தொடர்ந்திருந்தார். தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்தும், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சமர்ப்பித்திருந்தார். மேலும், தனது தொழிற்சாலை திறக்க அனுமதிக்கவில்லை எனில் நெவடா அல்லது டெக்சாஸுக்கு தனது தொழிற்சாலையை மாற்றிவிடுவேன் என்றும் மஸ்க் கூறியிருந்தார்.


latest tamil news


தற்போது டெஸ்லா தொழிற்சாலையில் 30 சதவீதப் பணியாளர்களுடன் வேலை நடைபெற்று வருவதாகவும், இதற்கு கவர்னர் கெவின் நியூஸம் அனுமதித்துள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். சமீபத்தில், கவர்னர் கெவின் நியூஸம், டெஸ்லாவுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்கள் அறிவுறுத்தலின் பேரில் டெஸ்லா ஒழுங்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் பாதுகாப்புத் திட்டத்தை இருதரப்பும் சேர்ந்து முடிவு செய்யவுள்ளதாகவும் அலமேடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
13-மே-202021:49:16 IST Report Abuse
Rajesh பணம் தின்னி கூட்டத்தில் இவனும் ஒருவன், செத்தால் இழப்பீடு தரும் ஈன பிறவி வேறென்ன சொல்ல......
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-மே-202014:19:21 IST Report Abuse
Pannadai Pandian மூர்க்கனா இவன் ???
Rate this:
Cancel
VTR - Chennai,இந்தியா
13-மே-202013:20:22 IST Report Abuse
VTR Nobody is above the law
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X