அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுப்பது மக்களின் கையில் உள்ளது: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
Tamil nadu, EPS, Coronavirus, Covid-19, dinamalar news, tn news, tn cm, tamil nadu coronavirus,
தமிழகம், இபிஎஸ், முதல்வர், கொரோனா, வைரஸ், கோவிட்-19, கலெக்டர், ஆலோசனை கூட்டம்

சென்னை: கொரோனாவை தடுப்பது மக்களின் கையில் தான் உள்ளது என மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர் இபிஎஸ் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


latest tamil news



கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: கண்ணுக்கு தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். ஏழை, எளிய மக்களுக்கு அத்யாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்கவும் அரசு வழிவகைகளை செய்துள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூன் மாதத்திலும் இந்த பொருட்களை மக்கள் பெற்று கொள்ளலாம். அதனால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில் ரூ.1,000 மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை வழங்கினோம். இதன்பின்னர் மீண்டும் அவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் வழியேயும் மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறோம். இதனால் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் பெறுகின்றனர்.


latest tamil news


கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும். தமிழகம் மற்றும் இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் சோதனை செய்யப்படுவதால் அதிக பாதிப்பு தெரிகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai,இந்தியா
13-மே-202019:33:11 IST Report Abuse
Krish Desa virodhigal vooradangu seidhaal makkal pattini enbaargal. Vooradangai eduthaal makkal coronaval saagiraargal enbaargal. Makkal kashtapattaal anandham
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-மே-202015:29:06 IST Report Abuse
J.Isaac Janarthanan அவர்களே துபாயில் வேலை பார்க்கிறீர்களா ,இல்லையென்றால் சும்மாவா?
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202015:55:48 IST Report Abuse
Janarthananநான் என்ன பண்ணுகிறேன் என்று பார்ப்பது உன் வேலை என்றால் நீ பிசியாக தான இருக்க ???...
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
13-மே-202018:17:31 IST Report Abuse
chakraதுபாயில் முஸ்லீம் கீழே என்ன வேலைன்னு எழுத்து நடையை பார்த்தாலே தெரியவில்லையா...
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
13-மே-202019:54:37 IST Report Abuse
Nallavan Nallavanஅங்கு என்ன வடிவேலு மாதிரி கே க மேகே கம்பெனி தான் அப்புறம் என்ன , பொழுதுணிக்கு இங்கே பின்ன எப்படி...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-மே-202015:08:52 IST Report Abuse
வெகுளி கொரோனா காலத்தில் தொழில்சாலைகள் அலுவலகங்களை மூடியது போல அரசியலுக்கும் தடை விதிக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X