பொது செய்தி

தமிழ்நாடு

உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டிய சீனா: அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டு

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
USA, CHINA, WHO, CHINA CORONAVIRUS, COVID 19, CORONAVIRUS, உலகசுகாதாரநிறுவனம், கொரோனா, கொோரனாவைரஸ், கோவிட்-19, அமெரிக்கா, சீனா, சிஐஏ, உளவுத்துறை

வாஷிங்டன்: கொரோனா வைரசை, சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க விடாமல், உலக சுகாதார அமைப்பை சீனா மிரட்டியது என அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ., அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சர்வதேச அளவில் 2,90,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் அமெரிக்கா மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அங்கு மட்டும் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா குறித்து விசாரணை நடத்திய அமெரிக்கா உளவு அமைப்பான சி.ஐ.ஏ., விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil newsஅந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசை, சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா கடுமையான நெருக்கடி கொடுத்தது. அப்படி அறிவித்தால், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வரும் ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்தி விடுவோம் என மிரட்டியது எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
13-மே-202016:45:04 IST Report Abuse
Viswam கரோனா அலை வீசத்தொடங்கியவுடன் அமேரிக்கா சரமாரியாக சீனாவின் பெயரில் குற்றம் தினமும் சுமத்தியதால் அவர்களுக்குள் நடக்கும் வர்த்தக போரில், போனவாரம் தான் சீனாக்காரன் நிறைய அமெரிக்க பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்தான் . மறுபடியும் குற்றம் சுமத்துகிறார்கள் என்றால் இன்னும் நிறைய பொருள்களுக்கு சீனா வரி விளக்கு அளிக்கவேண்டும் என்பதே அர்த்தம். எரிகிற வீட்டில் பிடுங்கறது லாபம். மத்தபடி நாம் நினைப்பதெல்லாம் கற்பனையே
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
13-மே-202015:34:54 IST Report Abuse
ocean kadappa india ஐக்கிய நாட்டு சபையில் வீட்டோ அந்தஸ்து வகிக்கும் சீனாவின் வீட்டோ பவரை உடனே ரத்து செய்ய வேண்டும். சீனாவுடன் உலக நாடுகள் வர்த்தக தொடர்புகளை தடுத்து நிறுத்தியவுடன் சீனாவின் ஐநாசபையின் அங்கத்தினர் பதவியையும் ரத்து செய்யலாம். ஒரு மனித உயிரை அழிப்பவனுக்கு கிடைப்பது மரண தண்டனை. சீனா அனைத்து உலக நாட்டு மக்களையும் பல்லாயிரக்கணக்கில் வைரஸ் போரில் கொன்றிருக்கிறான். அவனுக்கு தூக்கு தண்டனையை மிஞ்சிய வேறெந்த கடுந் தண்டனையை கொடுப்பது. அவன் ஏவி விட்டுள்ள கொரோனா வைரஸ் வயதானவர்கள் நடுத்தர வயதினர் குழந்தைகள் என அனைவரையும் கொன்றுள்ளது. அதன் தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களையும் அது இன்றளவும் விடவில்லை. அவர்களின் உடலுக்கள் புகுந்து சளி மண்டலத்தை வெளியே தெரியாமல் உள்ளே இருந்து உருவாக்கி வருகிறது. நாளவடைவில் சளி பெருகி காச நோயாக வெளியே வரும். அதற்கு பல ஆண்டுகளாகலாம். குளிர் பதனத்தில் தோன்றும் எந்த வைரசானாலும் முதலில் தாக்குவது ரத்த செல்கள். அதன் பிறகு உடலுக்குள் இருக்கும் குளிர்ந்த பகுதியான நுரையிரலில் தங்கி பல சீதள நோய்களை உருவாக்குகிறது. உடல் வெப்பத்தை அளக்க ஸ்டெதஸ் கோப் பயன்படுவது போல் நுரையீரலின் கபத்தினை அவ்வப்போது அளந்து அதனை கட்டுப்பாட்டில் வைக்க ஒரு கூடுதல் ஸ்டெதஸ் கோப்பும் தேவை .
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-மே-202017:06:11 IST Report Abuse
dandy1918 இல் ஸ்பெயின் நாட்டில் உருவாக்கிய SPANISH FLUE லட்ச்சக்கணக்கான ஐரோப்பியர்களை அழித்தது..இதற்காக ஸ்பெயின் நாட்டை எவரும் விலக்கி வைக்கவில்லை ..UN இல் இருந்து வெளியேற்றவும் இல்லை ...இதெல்லாம் முரசொலியில் CORONA கட்டுமரம் எழுதவில்லை...
Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
13-மே-202020:21:35 IST Report Abuse
Idithangi ஸ்பானிஷ் ஃப்ளு விற்கும் ஸ்பெய்னுக்கும் சம்பந்தம் இல்லை. அது தவறுதலாக வைக்கப்பட்ட பெயர். அது தோன்றிய இடம் அமெரிக்கா. வரலாற்றை சரியாக படிக்கவும் , டாண்டி அவர்களே....
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
13-மே-202014:38:12 IST Report Abuse
vnatarajan முதலில் சீனாவிற்கு UNO சபையிலுள்ள வீட்டோ அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு என்ன வழி என்பதை முதலில் உலக நாடுகள் யோசிக்கவேண்டும். மேலும் சீனா வூஹான் நகரத்திலுள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது என்ன என்பதை உலக மக்களுக்கு தெரிவிக்க எல்லா நாடுகளும் சேர்ந்து வற்புறுத்த வேண்டும் பல வளரும் நாடுகள் சீனாவின் உதவி கரத்தை பற்றிக் கொண்டிருப்பதால் அவர்கள் சீனாவை வற்புறுத்துவார்களா என்பது சந்தேகம்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-மே-202017:02:29 IST Report Abuse
dandyசென்ன பட்டணத்தில் ..எதாவது cinema studio வில் UN மாதிரி ஒரு set போட்டு சீனாவுக்கு எதிராக பிரேரணை கொண்டு வரலாம் மறக்காமல் சுடலை கானை அழைக்கவும்...
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
13-மே-202017:25:27 IST Report Abuse
Apposthalan samlinநீங்கள் ஏன் சீனாவுக்கு செம்பு தூக்குகிறீர்கள் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X