பொது செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பஸ்வசதி: அமைச்சர் தகவல்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பத்தாம்வகுப்பு, தேர்வு, பஸ், அமைச்சர், செங்கோட்டையன்,


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, வரும் மாணவர்களுக்கு பஸ்வசதி செய்து தரப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 முதல் 12 வரை நடைபெற உள்ளது. தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2 லும், மார்ச் 24 ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத 37 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் 4ல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நெருக்கடி நிலை மாறி இயல்பு நிலை திரும்பிய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


latest tamil news



இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பஸ் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தேர்வுக்கு வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-மே-202016:08:21 IST Report Abuse
இந்தியன் kumar sariyaana
Rate this:
Cancel
Iniyavan - Chennai,இந்தியா
14-மே-202002:38:21 IST Report Abuse
Iniyavan இவரு ஈசியா சொல்லிருவாரு... அழைச்சிட்டு வரும் போதும் கொண்டு போய் விடும் போதும் பஸ்களில் என்னன்ன குளறுபடிகள் நடக்குமோ... பிள்ளைகள் அங்கே வீட்டுக்கு திரும்ப வர வேறெந்த பஸ் இல்லாமல் தவிக்க நேரிடும் அவலங்கள் வரப் போகிறது. பரிட்சையை தள்ளி வச்சால் தான் என்ன குறைந்து விடும்.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-மே-202018:30:16 IST Report Abuse
தமிழர்நீதி ஏன்னா ஒரு ஏற்பாடு . கொளுத்தும் வெய்யிலில் கொரோனாவை சுமந்துவரும் அரசின் பேருந்தில் ஏறி வந்து தேர்வு எழுதணும் . வரும் வழியில் பயணத்தில் நடத்துனர் ஓட்டுநர் நடந்துகொள்ளும் விதம் பேசும் வசைச்சொல் எல்லாம் மனவர்களுக்கு படித்ததும் மறந்துவிடும். உசார் மாணவர்களே . உங்கள் கால்களை நம்புங்கள் . இந்த அரசை நம்பாதீர்கள் . தமிழக அரசிற்கு சாராய கடை நடத்தும் அக்கறை கல்வி கற்பிப்பதில் இல்லை . இது ஒரு கொள்ளைக்கூட்டம். உசார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X