20 ஆண்டுகளில் 5 வைரஸ்களை பரப்பிய சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
5_Plagues, China, US, 20Years, SecurityAdvisor, CoronaVirus, Covid-19, America, சீனா, அமெரிக்கா, வைரஸ்கள், பரவல், கொரோனா, கோவிட்19

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய 5 வைரஸ்கள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவியது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 2.93 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 83 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரசை சீனா திட்டமிட்டு பரப்பியதாகவும், சீனா நினைத்திருந்தால் மற்ற நாடுகளுக்கு பரவ விடாமல் கட்டுப்படுத்தி இருக்கலாம் எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.


latest tamil news


இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவில் இருந்து பேரழிவை ஏற்படுத்தும் வைரஸ்கள் உற்பத்தி ஆகுவதை மீண்டும் ஏற்க முடியாது என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்ததா அல்லது மார்க்கெட்டில் இருந்து வந்ததா என்பது முக்கியம் அல்ல. சீனாவில் இருந்து வந்ததே பெரிய பிரச்னை ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய சார்ஸ், ஏவியன் ஃப்ளு, பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 வைரஸ்கள் சீனாவிடம் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது.


latest tamil news


நோய்களை பரவ விட்டு உலக நாடுகளை சீனா சேதப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அனுப்ப அமெரிக்கா முன்வந்தபோது, அதை ஏற்கச் சீனா மறுத்துவிட்டது. சுகாதாரத்தை சீனா முறையாக கையாள வேண்டும். இன்னும் கொரோனா போன்ற மற்றொரு சம்பவம் சீனாவில் இருந்து பரவுவதை ஏற்கவே முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் 5வது முறையாக உலக பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு சுகாதார பேரழிவு ஏற்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
20-மே-202008:56:25 IST Report Abuse
Rajesh seena porulgalayum, seenargalayum ella naatil irundhu thooki eriyungal...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X