பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.25 லட்சம் ரயில் கட்டணம் செலுத்தி பீகார், ஜார்கண்ட் தொழிலாளர் அனுப்பிவைப்பு

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ரயில் கட்டணம், பீகார், ஜார்கண்ட், தொழிலாளர், அனுப்பிவைப்பு, Tamil Nadu, migrant workers, Bihar, Jharkhand, special trains, tn govt, tn news

திருநெல்வேலி: ரூ 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி வடமாநில தொழிலாளர்கள் ரயில்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3வது 4வது அணுஉலைகளின் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் பீகார், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பும்படி அணுஉலை வளாகத்தில் தகராறு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே நேற்று (மே12) திருநெல்வேலியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் அணுஉலை தொழிலாளர்கள், துாத்துக்குடி நிறுவன தொழிலாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 345 பேர் அனுப்பப்பட்டனர்.


latest tamil news


பீகார், ஜார்கண்ட் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ரயிலில் செல்வதற்கான ரூ 25 லட்ச ரூபாய் கட்டணத்தை, துாத்துக்குடி, நெல்லை மாவட்ட நிர்வாகங்கள் செலுத்தியுள்ளன. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3வது, 4வது அணுஉலைகளின் கட்டுமான பணிகள், எல் அன்ட் டி நிறுவனம் சார்பில், மேற்கொள்ளப்பட்டன. அங்கு பீகார், ஜார்கண்ட் மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். ஊரடங்கால் பணிகள் முடங்கிய போது, நிலைய வளாகத்திலேயே இடவசதி, உணவு வசதிகளை நிறுவனம் செய்தது. ஆனால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி, மே 11ம் தேதி தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். கல்வீச்சில் இன்ஸ்பெக்டர், ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து டி.எஸ்.பி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரயிலில் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது.


இன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் கிளம்பியது. இதில் ஆயிரத்து 47 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்காக கூடங்குளத்தில் இருந்து அரசு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். அணுமின்நிலையத்தில் தொழிலாளர்கள் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வந்திருந்தார்கள். இருப்பினும் தற்போதைய செலவு உணவு, குடிநீர், ஒரு பயணிக்கு டிக்கெட் 995 ரூபாய் வீதம் 25 லட்சம் ரூபாய்க்கு ரயில் டிக்கெட்டிற்கான கட்டணம் என செலவுகளை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகங்களே செலுத்தின.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202020:55:56 IST Report Abuse
  karthik அதுல 24 லட்சம் காந்தி கணக்கு
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
13-மே-202020:17:47 IST Report Abuse
s vinayak தமிழன் ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிட நினைப்பவன். அரசியல், அடாவடித்தனம் செய்வதுதான் பிடித்தால் தொழில்.
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
13-மே-202020:03:10 IST Report Abuse
R chandar TAMIL NADU SHOULD USE OWN HUMAN RESOURCES INSTEAD GIVING EMPLOYMENT TO OTHER STATE PERSONS . IF THE RESOURCES OF TALENT NOT AVAILABLE V CAN BRING OTHER STATE PERSONS ,TAMILNADU SHOWS GRATITUDE TO OTHER STATE WORKERS ON SPING JOURNEY FARE FOR THEM GOOD THINKING AND GOOD MOVE
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X