பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு மூலம் அதிகளவு கொரோனா பரவல்: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோயம்பேடு, சென்னை, கொரோனா, கொரோனாவைரஸ்,  முதல்வர், Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tamil Nadu, Chennai


சென்னை: கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்ற அரசின் எச்சரிக்கையை வியாபாரிகள் ஏற்காததால், கோயம்பேடு மூலம் அதிகளவு கொரோனா பரவியதாக முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால் கொரோனா அதிகம் பரவியது. கோயம்பேட்டில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என முன்னரே எச்சரிக்கப்பட்டது. ஆனால், அரசின் எச்சரிக்கையை ஏற்க வியாபாரிகள் மறுத்துவிட்டனர். கோயம்பேடு மூலம் கொரோனா பரவல் வாய்ப்பு உள்ளதை அறிந்த அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னைக்கு வெளியே அமைக்கும் தற்காலிக சந்தைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என அஞ்சி வியாபாரிகள் மறுத்துவிட்டனர். அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மே 10 முதல் திருமழிசையில் தற்காலிக சந்தை செயல்படுகிறது.


latest tamil news



சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றதால், பல மாவட்டங்களில் கொரோனா பரவியது. சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால், அதிக பரவல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நெரிசல் மிக்க பகுதிகளில் 26 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு அதிக பாதிப்பு ஏற்பட கோயம்பேடு சந்தை காரணமாக அமைந்துவிட்டது. கோயம்பேடு பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுவது தவறு. மருத்துவமனையில் இருந்து படிப்படியாக குணமடைந்து வருகின்றனர். தமிழக அரசின் முயற்சியால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எந்த மாவட்டத்திலும் உணவுக்கு பஞ்சமில்லை. தங்களது மாவட்டத்தில் கொரோனா இல்லை என சில கலெக்டர்கள் தெரிவிததுள்ளனர். அரசின் நடவடிக்கைகள் பலனளித்து வருகிறது. எவ்வித குறைபாடு இல்லாமல் மக்களை அரசு காத்து வருகிறது.

இங்குள்ள வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை படிப்படியாக அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இயல்பு நிலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே செல்வதை தடுக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்கு பிறகு திறந்து கொள்ளலாம். அநாவசியமாக வெளியே செல்வதை மக்கள் நிறுத்த வேண்டும் . வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். தேர்வு எழுத மாணவர்கள் செல்வதற்காக பஸ் வசதியை கலெக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை கலெக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asvin Raj - Periyakulam,இந்தியா
13-மே-202022:30:22 IST Report Abuse
Asvin Raj சூப்பர் சூப்பர் முதல்வரின் விளக்கம் எப்படி இவ்வாறு அறிக்கை விடுகிறீர்கள் லாக்டவுன் ஆரம்பித்து நாற்பது நாட்கள் அரசின் உத்தரவு களை தவறாமல் கடைபிடித்து , தன் வாழ்வாதரங்களை இழந்து கஷ்டப்பட்டு பரிதவித்து கொண்டு கொராணவில் இருந்து விடுபடலாம் என எண்ணி கொண்டு இருந்த, சட்டத்தை மதித்து நடந்த கோடிக்கணக்கான சாமாணிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்ட பேராசை கொண்ட ஒரு சில கோயம்பேடு வியாபாரிகளை அடக்கி ஆள முடியாமல் அவர்களுக்கு துணை போய் இன்று பல மாவட்ட மக்களையும் துன்ப கடலில் ஆழ்த்தி உள்ளீர்கள். உங்கள் சட்டம் சாமாணிய மக்களுக்கு மட்டும் தானா? பெரும் பண முதலைகளுக்கு இல்லையா?.உயிர்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா? தெரிந்தே தவறு செய்யும் கோயம்பேடு வியாபரிகளையும் ,அவர்களுக்கு துணை போண தமிழக அரசை விட , தெரியாமலேயே தவறு இழைத்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மக்கள் எவ்வளவோ மேல்.
Rate this:
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
13-மே-202022:05:12 IST Report Abuse
Rajan ஓஹ்..., இதுவே இப்பத்தான் புரிகிறதா??? சும்மா வியாபாரிகள் மீது பழிபோட்டு என்ன பயன். வீதி வீதியாக சென்னையை தனிமைப்படுத்த வேண்டும். இவர்களால் மற்ற ஊர்களும் பாதிக்கும்.
Rate this:
Cancel
13-மே-202021:52:46 IST Report Abuse
  karthik மூர் மார்க்கெட் போல் கோயம்பேடு மார்க்கெட்டையும் நிரந்தரமாக மூட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X