கடந்த 24 மணிநேரத்தில் ஆந்திராவில் 48 பேருக்கு கொரோனா

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து 2000 ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் ஒருவர் பலியானார். மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த 73 பேர் உட்பட மாநிலத்தில் 2,137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



சுகாதாரதுறை அதிகாரிகளின் கூற்றுபடி, வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களில் 38 பேர் மஹாராஷ்டிராவையும், 26 பேர் குஜராத்தையும், 8 பேர் ஒடிசாவையும் மற்றொருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றிலிருந்து 86 பேர் குணமடைந்தனர். மொத்தமாக 1,142 பேர் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் 9,284 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X