உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய பலம்: ம.பி., முதல்வர் வரவேற்பு

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement
Economic Package, Shivraj Singh Chouhan, MP Chief minister, Madhya pradesh, Coronavirus, Corona, Covid-19, Finance Minister, Nirmala Sitharaman

புதுடில்லி: நிதி அமைச்கம் இன்று அறிவித்த திட்டங்களால், உள்ளூர் நிறுவனங்கள் புதிய பலம் பெறும் என ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாக, பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதனை தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில், பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என இன்று அறிவித்தார்.


latest tamil news



இதற்கு வரவேற்பு தெரிவித்து ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: நிதி அமைச்சகம் அறிவித்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கை, உண்மையில் சிறந்த வளர்ச்சி திட்டமாகும். பிரதமரின் இந்த அறிவிப்பு சிறு, குறு நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன். இதனால் தொழில் மேம்படுவதுடன், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

மேலும் இது உள்ளூர் நிறுவனங்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். தன்னம்பிக்கையுடன் நாம் நடப்போம். ரூ.200 கோடி வரையிலான அரசு டெண்டர்களில், சர்வதேச நிறுவனங்கள் தலையீடு இல்லாமல் இருந்தால், உள்ளூர் நிறுவனங்கள், குறிப்பாக சிறிய நிறுவனங்கள் புதிய வலிமையை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X