சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 13, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

பனி ஆறுகள்


வெயில்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் வடமாநில நதிகள் வற்றாத ஜீவ நதிகளாக உள்ளன. ஆர்டிக், அண்டார்டிகாவிற்கு வெளியே உள்ள பனியாறுகளில் பெரியது சியாசின். இதன் நீளம் 72 கி.மீ. காஷ்மீரில் சியாசின் தவிர பயாபோ, ஹிஸ்பூர், நுப்ரா, பால்ட்ரோயா போன்ற பனியாறுகள் உள்ளன. இவை கோடையில் உருகும் போது, அதனை ஈடுகட்ட புதிய பனிக்கட்டிகள் தோன்றுகின்றன. கோடையில் உருகும் பனியாறு, குளிர்காலத்தில் மீண்டும் பழைய நிலையை அடைகிறது. பனியாறுகள் ஏற்படுத்தும் இயற்கைச் சமநிலை
வடமாநிலங்களை காக்கிறது.



தகவல் சுரங்கம்

பாலைவனம் ஆன ஏரி


மரங்களே இல்லாத மணல் சூழ்ந்த பகுதி 'பாலைவனம்' என அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய பாலைவனம் 'சஹாரா' என்பது அறிந்ததே. இதே போல கனடாவில் உள்ள 'கார்கிராஸ்' பாலைவனம் உலகின் சிறிய பாலைவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதன் பரப்பளவு
640 ஏக்கர் மட்டுமே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஏரி இருந்தது. நாளைடைவில் இது பாலைவனமாக மாறியது. இப்பாலைவனம் அருகில் பென்னெட் என்ற ஏரி இருக்கிறது. இதன் சுற்றுப்புற பகுதிகளை விட இங்கு மழைப்பொழிவு மிகவும் குறைவு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X