'பிரிட்டன் பொருளாதாரம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 சதவீதம் குறையும்'

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement

லண்டன்: கொரோனாவின் தாக்கத்தால் பிரிட்டன் பொருளாதாரம் இந்த நிதியாண்டின் காலாண்டில் 2 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



பிரிட்டனில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 23 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முந்தைய மாதத்தை விட 5.8 சதவீதம் குறைந்தது.

இந்நிலையில் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2 சதவீதம் குறையும் என தேசியப் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் சேவைத்துறை, கட்டுமானம், கல்வி, வாகனத் தொழில் , உணவகங்கள் ஆகிய துறைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரம் தகவல், தொழில் நுட்பம், மருந்து உற்பத்தி சோப்பு மற்றும் தூய்மை பொருட்கள் தயாரிப்பு போன்றவை வளர்ச்சி அடைந்துள்ளன.


latest tamil news



பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டில் 14 சதவீதம் வீழ்ச்சி அடையும் என பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X