சிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு கொரோனா

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement

சிங்கப்பூர் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சிங்கப்பூரில் மேலும் 675 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் மேலும் 675 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் வெளிநாடுகளில் இருந்து பணியாற்றும் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் இவர்கள் கட்டுமான பணி மற்றும் உணவு விடுதி போன்ற பல்வேறு பணிகளில் பணியாற்றி வருபவர்கள்.


latest tamil news



இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,346 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் இதுவரை 21 பேர் பலியாகினர். பாதிப்புகளில் இருந்து சுமார் 3,851 பேர் குணமடைந்துள்ளனர். வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசும் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெற்காசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமான நாடுகளில் சிங்கப்பூர் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X