கோல்கட்டா: பொருளாதார மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு பொருளாதார திட்டம், பெரிய பூஜ்ஜியம் எனவும், மாநிலங்களுக்கு அதில் எதுவும் இல்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான விரிவான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு 'ஒரு பெரிய பூஜ்ஜியம்' என மம்தா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மம்தா கூறியதாவது: கொரோனா பாதிப்பில், மத்திய அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார சிறப்பு திட்டத்தால், மக்கள் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது ஒரு பூஜ்ஜியம்.
நிதி பற்றாக்குறையால் வாடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எதையும் வழங்கவில்லை. திட்டத்தில், மாநில அரசுகளுக்கு எதுவும் அறிவிப்பில்லை. கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. திட்டத்தில் அமைப்புசாரா துறை, பொதுச் செலவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE