பொது செய்தி

இந்தியா

வரலாற்றில் இல்லாத அளவு 12.20 கோடி பேர் வேலை இழப்பு

Updated : மே 15, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரலில், ௧௨.௨௦ கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், கனடாவை பின் தள்ளி, இந்தியா, 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 74 ஆயிரத்து, 281 ஆக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, வைரஸ் பாதித்த சர்வதேச நாடுகளின் பட்டியலில், கனடாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா, 12வது இடத்தை பிடித்துள்ளது. வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனா, 11வது இடத்தில் உள்ளது. கடந்த, 24 மணிநேரத்தில், நாடு முழுதும், 'கொரோனா' வைரசால், 122 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.


அதிகரிப்புஅதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த, 24 மணிநேரத்தில், புதிதாக, 3,525 பேருக்கு, தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 74 ஆயிரத்து, 281 ஆக அதிகரித்துள்ளது. இதில், 47 ஆயிரத்து, 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 ஆயிரத்து, 385 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம், குணமடைந்தோரின் விகிதம், 32.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில், வெளிநாட்டினரும் அடங்குவர்.இந்த வைரசால், கடந்த, 24 மணி நேரத்தில், 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில், 24; டில்லியில், 13; தமிழகம், மேற்கு வங்கத்தில் தலா, எட்டு; ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா, நான்கு; தெலுங்கானா, உ.பி.,யில் தலா, இரண்டு; ஆந்திரா, பஞ்சாப், சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் தலா, ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், நாட்டின் பலி எண்ணிக்கை, 2,415 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.latest tamil news

latest tamil news

latest tamil news

latest tamil news

latest tamil news
வரலாறு காணாத உயர்வுஇந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, சி.எம்.ஐ.இ., தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை:கொரோனா பரவலைத் தடுக்க, மார்ச், 25ல் பிறப்பித்த ஊரடங்கு நடவடிக்கையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுஉள்ளன.

இதனால், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களில், கடைகள், உணவகங்களில் பணியாற்றுவோர், சிறு வணிகர்கள், கூலி வேலை செய்வோரின் எண்ணிக்கை, பெருமளவு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு மே, 3 வரையிலான வாரத்தில், நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், வரலாறு காணாத வகையில், 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2017 ஜூலை - 2018 ஜூனில், 6.1 சதவீதமாக இருந்தது. இது, 45 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.வேலையில் உள்ளோர் மற்றும் வேலையில்லாதோரை உள்ளடக்கிய, தொழிலாளர் பங்களிப்பு விகிதம், ஏப்., 21 நிலவரப்படி, 35.4 சதவீதமாக இருந்தது.இது, வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்ததால், மே, 3ல், 36.2 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.கடந்த மார்ச்சில், வேலைவாய்ப்பு, 39.60 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.இந்நிலையில், ஏப்ரலில் வேலைவாய்ப்பு, மேலும், 11.40 கோடி குறைந்து, 28.20 கோடியாக சரிவடைந்துஉள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அரை வயிறு உணவுசில தொண்டு நிறுவனங்கள், ஊரடங்கு பாதிப்பு குறித்து, கிராமங்களில் ஆய்வு நடத்தின. அசாம், பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட, 12 மாநிலங்களில், 5,000 குடும்பங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.அதில், 50 சதவீத குடும்பங்கள், வருமானம் இல்லாமல், அரை வயிறு உணவு தான் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202022:26:58 IST Report Abuse
Lion Drsekar வேலை இழப்பு என்ற தலைப்பில் கோரோனோஸ் செய்தி, நம் நாட்டைப்பொறுத்த வரையிலோ இதற்கும் எதற்கும் தொடர்பே இல்லை, காரணம் அன்று முதல் இன்று வரை எல்லாமே இலவசம், கலப்பு திருமணம் இலவசம், தாலி இலவசம், வேலை இல்லத பட்டதாரிகளுக்கு பென்சன் , .... க்கு இலவச சத்து மாத்திரைகள், இலவச அரிசி, இலவச தேர்தல் வாக்குறுதிகளில் கிடைக்கும் இலவச சலுகைகள், எதற்கு வேலைக்கு போகவேண்டும், தேர்தல் வந்தால் பட்ட சாராயம், பிரியாணி, இப்படி எல்லாமே இலவசமாகக் கிடைக்க எதற்கு வேலைக்கு போகவேண்டும், ஆகவேதான் தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
14-மே-202021:14:21 IST Report Abuse
Young Prince kamalji varungala mudalvar of TN
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-மே-202018:57:38 IST Report Abuse
g.s,rajan Un employment will surely surge after lockdown period,like Corona virus.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X