கொரோனா வைரஸ் லேப்பில் இருந்து தான் பரவியது: கட்கரி

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Nitin Gadkari, coronavirus, covid19, Lab,Not Natural, கட்கரி, நிதின்கட்கரி, கொரோனா

புதுடில்லி: கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; லேப்பில் இருந்து தான் பரவியது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல. அது செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. லேப்பில் இருந்து தான் வைரஸ் பரவி உள்ளது. உலக நாடுகளை அது தற்போது அதிகம் பாதித்துள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் நிலவுகிறது. சிலர் அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். தொற்றை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.


latest tamil newsவைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர். தற்போது வரை வைரஸ் தடுப்பு மருந்து ஏதும் இல்லை. மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே பிரச்னையிலிருந்து முழுமையாக தப்பிக்க முடியும். தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். அது எப்போது என்பது தான் தெரியவில்லை.

அதுவரை கொரோனா வைரசுடன் வாழ பழகி கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். கொரோனாவிலிருந்து தப்பிக்க வேறு வாய்ப்பு இல்லை. வைரஸ் பிரச்னையை எதிர்கொள்ள உலகமும், இந்தியாவும் தயாராகி விட்டன.

கொரோனாவுடன் போராடும் அதே நேரத்தில், பொருளாதார பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தியா ஏழ்மை நாடு. நம்மால் மாதக்கணக்கில், ஊரடங்கை அமல்படுத்தி சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202004:51:12 IST Report Abuse
Nepolian S என்னய்யா உங்க பிரதமர் நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து விட்டது என்கிறார் நீங்க ஏழ்மை நாடு என்கிறார்... அப்ப ஆறு வருசமா என்னத்த தான் கிழிச்சீங்க...ஓ... வாயில் வடையா...ஓகே ஓகே
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
14-மே-202013:37:27 IST Report Abuse
Dr. Suriyaneenga 60 varusama kilichathai kilichirupaankalo.......
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-மே-202004:05:56 IST Report Abuse
B.s. Pillai China is, not only not trustworthy, but it is a rogue country. It d this bo weapon to subdue the whole world, to bring all other countries kneeling down in front of them. Now, all other countries should use the same weapon, not bio war, but undermine the economy of China. And it is very easy. Just BOYCOTT all chinese products and Chinese Apps. We do not import food grains from htem, as China itself dependant on other countries for its food. We can survive without the technological products made in China, by buying it elsewhere except China. This is the only easy way to reverse the process, i.e. to subdue China and bring it to its knees in front of all other countries. If the world misses this Golden chance, there is no hope for our survival. We can win, without loss of blood and in the most easiest way, without declaring war, by following its own plan of hitting the economy.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-மே-202003:49:45 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இரும்புத்திரை நாட்டில் உண்மையை கண்டறிவது என்பது இயலாதா காரியம்.பலநாட்டு விசாரணை கமிட்டி அனுப்பினாலும்..அந்த கல்லுளி மங்கன் களிடமிருந்து எந்த ஒரு உண்மையும் வெளியே வராது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X