சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஆட்டிப் படைக்கும் பதவி ஆசை!

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆட்டிப் படைக்கும் பதவி ஆசை!

ஆட்டிப் படைக்கும் பதவி ஆசை!

'பதவி பறிபோனால் தான், எங்களைப் போன்றமூத்த தலைவர்கள், இவரது கண்ணுக்கு தெரிவோம் போலிருக்கிறது' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பற்றி, எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த மாநிலத்தில் உள்ள காங்., மூத்த தலைவர்கள். பா.ஜ.,வின் அதிரடி அரசியலால், ம.பி.,யில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. காங்கிரசைச் சேர்ந்த, 22 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., விரித்த வலையில் சிக்கி, தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த, 22 தொகுதிகளுக்கும் அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், மீண்டும் அந்த கட்சியின் ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால், கமல்நாத் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தன்னால் ஓரம் கட்டப்பட்ட, மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், சுரேஷ் பச்சோரி, அஜய் சிங், பிரஜாபதி போன்றோரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 'இடைத்தேர்தல் வரும் நேரத்தில், உங்களைப் போன்ற தலைவர்கள் ஒதுங்கியிருக்கக் கூடாது. தேர்தல் வேலையை பாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன்' என, 'ஐஸ்' மழையில், அவர்களை குளிர்வித்து வருகிறார்.திக்விஜய் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களோ, 'இத்தனை நாட்களாக இவர் எங்கிருந்தார்; இப்போது திடீரென பாசமழை பொழிகிறாரே... பதவி ஆசை தான், அவரை இப்படி ஆட்டிப் படைக்கிறது' என, முணு முணுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
punitha - Chennai,இந்தியா
14-மே-202020:52:42 IST Report Abuse
punitha This is Punitha. I have severe health issues-Brain Injury,ENT, Stroke.I need help from some one. Please consider and reply.Apollo [Greams Road /Teynampet] UHID NO: 167486. IP NO: 32863
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X