சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்: 'கொரோனா வைரசுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்' என்று மத்திய அரசு கூறுவது ஏற்க கூடியது அல்ல; கடும் கண்டனத்துக்குரியது. அதுபோல, மதுக்கடைகளை, தமிழக அரசு திறந்தது தவறு. மேலும், நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட, டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததும் தவறு.

'டவுட்' தனபாலு: மத்திய சுகாதாரத்துறை, மாநில சுகாதாரத்துறை அல்லது தமிழக அரசின் செயல்பாடுகளை, உங்களைப் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் என்றாவது பாராட்டியிருந்தால், இப்போதைய உங்களின் கண்டனம் எடுபட்டிருக்கும். அவ்வாறு இல்லையே... அதை நீங்களும் அறிந்தே, 'எதற்கும், நாமும் சொல்லி வைப்போம்' என, பேட்டி அளித்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது!அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்
: பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களை தேவையற்ற விதத்தில் குழப்பும் விதமாக, அரசியல் பிழைப்புக்காக, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அங்கலாய்க்கிறார்.

'டவுட்' தனபாலு: தேர்வு வேறு, தேர்தல் வேறு என்பதை புரியாமல், இப்படித் தான் எல்லா தேர்தலையும், தி.மு.க., எதிர்க்கிறது. முதலில், உள்ளாட்சி தேர்தலை எதிர்த்தது; நீதிமன்றம் சென்று தடையாணை வாங்கியது... இப்போது, பொதுத் தேர்வை எதிர்க்கிறது. மேலும், இந்த தேர்வை நிறுத்த, தி.மு.க.,வும், கோர்ட்டுக்கும் செல்லுமோ என்ற, 'டவுட்'டும் ஏற்படுகிறது!


தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த்:
மாநிலம் முழுதும், மூன்று லட்சம் போட்டோகிராபர்கள் உள்ளனர். இவர்களை, நல வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த, 49 நாட்களுக்கு மேலாக வருமானம் இல்லாமல் உள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கியது போல, போட்டோகிராபர்களுக்கும் அரசு அளித்திருக்கலாம்.

'டவுட்' தனபாலு: ஒருவர் மீது விளம்பர வெளிச்சம் விழுவதற்கு முன், போட்டோகிராபர்களின் கேமரா ஒளி, அவர்கள் மேல் விழுகிறது. போட்டோகிராபர்களால் தான், பலர் பிரபலமாகியுள்ளனர். அந்த நன்றிக்கடனுக்காகத் தான், ஆதரவு குரல் கொடுக்குறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
14-மே-202016:34:52 IST Report Abuse
Suppan Mr. Azhagiri, Why don't you stop ing of Liquor vends in Punjab (where your Government is ruling) from 16th May along with home delivery. How is it that you guys have such ive amnesia?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X