சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 13, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்களைப் போன்ற, 'தலைவர்கள்' மக்களை குழப்பாமல் இருந்தால், பலனளிக்கும்...' என, கண்டிப்புடன் கூற வைக்கும் வகையில், மக்கள் நீதி மைய தலைவர், நடிகர் கமல் அறிக்கை: உணவின்றி அழும் குழந்தைகள், பணமின்றி தவிக்கும் ஏழைகளுக்காகவும், பிரதமர் அறிவித்துள்ள திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், இத்திட்டம் பலனளிக்குமா என, நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாடும், கவனித்து கொண்டிருக்கிறது.

'அப்போ, தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரையும், வெற்றி பெற்றவர்களாக அறிவித்து விடலாமா...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிக்கை: இயல்பு நிலை திரும்ப, இன்னும் எத்தனை நாட்களாகும் என்று தெரியாத சூழலில், 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன... எனவே, இந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.



'மே, 31வரை, ரயில், விமானம், தமிழகத்திற்கு வர வேண்டாம் என, முதல்வர் கூறியுள்ளாரே...' என, நினைவுபடுத்தும் வகையில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை:
ஊரடங்கு காரணமாக, பல நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க, 16 முதல், 22 வரை, 31 நாடுகளில் இருந்து, 149 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஆனால், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படவில்லை. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு, தமிழக அரசு, கடுமையான அழுத்தம் தர வேண்டும்.



'அரசின் உதவியை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், தொழிலாளர்களை, விதவிதமான பொருட்களை மண்ணில் உற்பத்தி செய்யச் சொல்லுங்கள்...' என, அறிவுறுத்த தோன்றும் வகையில், மண் பாண்டத் தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் தலைவர், சேம.நாராயணன் அறிக்கை:
அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்களுக்கு, மற்ற மாநிலங்கள் அறிவித்துள்ளது போல, 5,000 ரூபாய் ரொக்கம், ஒரு மூட்டை அரிசி வழங்க வேண்டும். மண் பாண்டத் தொழிலாளர்களுக்கு, நிவாரண நிதி, 4,000 ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது; அதையும் வழங்க வேண்டும்.



'தமிழகத்தில் உள்ள, 'டிவி'க்கள், அரசியல் கட்சிகள் கைகளில் உள்ளன. கேசட்டை மாற்றி போட்டு, மாணவர்களுக்கு, அரசியல் பாடம் நடத்தி விட வாய்ப்பு உள்ளது...' என, கிண்
டலாக கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வை, ஜூன், 1 முதல் நடத்தப்பட உள்ளன. எனவே, மாணவர்களுக்கு, 'ஆன் லைன்' வழியே, வகுப்புகள் நடத்த வேண்டும். அரசின் கல்வி மற்றும் தனியார், 'டிவி'களில், நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X