சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பதிவு துறையில் பதவிக்கு அடம் பிடிக்கும் உதவியாளர்கள்!

Added : மே 13, 2020
Share
Advertisement
 பதிவு துறையில் பதவிக்கு அடம் பிடிக்கும் உதவியாளர்கள்!

பதிவு துறையில் பதவிக்கு அடம் பிடிக்கும் உதவியாளர்கள்!

''போட்டா போட்டி போட்டு, போலீஸ்ல புகார் தர்ற அளவுக்கு போயிடுச்சுங்க...'' என்றபடியே, அன்வர்பாய் வீட்டு முற்றத்தில் அமர்ந்தார்,
அந்தோணிசாமி.''என்ன விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''அடுத்த வருஷம் நடக்கப் போற சட்டசபை தேர்தல்ல, திருவள்ளூர் தொகுதியை கைப்பற்ற, தி.மு.க.,வுல பலர், இப்பவே காய் நகர்த்திட்டு இருக்காங்க... மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகி குமரன், ஊரடங்கால பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்களை வழங்கி, தொகுதியில ஆதரவு திரட்டிட்டு
இருக்காருங்க...
''அதே நேரம், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ராஜேந்திரனும், தொகுதியை கைவிட்டுடக் கூடாதுன்னு, நிவாரணங்களை வழங்கிட்டு இருக்காருங்க... போட்டி போட்டு, இவங்க நடத்துற நிவாரண உதவிகள் வழங்குற நிகழ்ச்சிகள்ல, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவே
இல்லைங்க...
''இதனால, இவங்க மேல போலீஸ்ல புகார் தரலாமான்னு, சம்பந்தப்பட்ட பகுதி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தரப்புல விசாரணை நடத்திட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விஸ்தாரமா இடமிருந்தும், அரசாங்கத்துக்கு தெரியாம இருக்கு ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், குப்பண்ணா.''எதுக்கு, எங்க வே இடமிருக்கு...'' என விசாரித்தார்,
அண்ணாச்சி.''சென்னை,
கிண்டியில இருக்கற தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்துல, நிறைய கட்டடங்கள் இருக்கு... இங்க பயிற்சிக்கு வரவா தங்கறதுக்கு, '100' பெட் வசதிகளும் இருக்கு ஓய்...
''இங்க, இப்போ எந்த பயிற்சியும் நடக்காம, பூட்டியே வச்சுருக்கா... இந்த கட்டடத்தை, கொரோனா சிறப்பு வார்டா மாத்திக்கலாம்னு சொல்றா... அதே நேரம், நெடுஞ்சாலை துறை ஊழியர்களுக்கு அவசரமா பயிற்சி குடுக்கணும்னா, அதுக்கும் இங்க தாராளமா இடம் இருக்கு ஓய்...'' என்றார்,
குப்பண்ணா.''பதவி தந்தா தான், வேலைக்கு போவோம்னு அடம் பிடிக்காவ வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஊரடங்கு அமல்ல இருந்தாலும், சார் பதிவாளர் அலுவலகங்களை திறந்து, பத்திரப்பதிவு பணிகளை செஞ்சிட்டு இருக்காங்கல்லா... சார் பதிவாளர் இல்லாத அலுவலகங்கள்ல, உதவியாளர்களை பொறுப்பு அதிகாரிகளா போட்டிருக்காவ வே...
''அதே நேரம், சார் பதிவாளர்கள் இருக்கிற அலுவலகங்கள்ல, உதவியாளர்கள் பலர் வேலைக்கு போக மாட்டேங்காவ... 'எங்களுக்கும், சார் பதிவாளர் பணி தந்தா தான் வருவோம்'னு அடம் பிடிக்காவ வே...
''இதனால, பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்கள், உதவியாளர்கள் இல்லாமலேயே செயல்படுது... இவங்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்துல இருக்கிற சில அதிகாரிகள் ஆதரவா இருக்காவ...
''இதை இப்படியே வளர விட்டா, பதிவுத்துறையில ஒழுங்கு முறையே இல்லாம போயிடும்னு, நியாயமான அதிகாரிகள் புலம்பிட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
அரட்டை முடிய, நண்பர்கள் ஜமா கலைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X