பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மே, 14, 1883ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள, புதுார் கிராமத்தில், 1883 மே, 14ம் தேதி பிறந்தவர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். ஏழ்மையிலும், படிப்பை கைவிடவில்லை. சென்னை கிறிஸ்துவக் கல்லுாரியில் சேர்ந்து, பி.ஏ., வரலாறு படித்தார்; பி.எல்., பட்டம் பெற்றார்.சென்னை உயர்நீதிமன்றத்தில், முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரானார். திறமையால், சென்னை அட்வகேட் ஜெனரலாக உயர்ந்து, 15 ஆண்டுகள்
  இதே நாளில் அன்று

மே, 14, 1883

ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள, புதுார் கிராமத்தில், 1883 மே, 14ம் தேதி பிறந்தவர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். ஏழ்மையிலும், படிப்பை கைவிடவில்லை. சென்னை கிறிஸ்துவக் கல்லுாரியில் சேர்ந்து, பி.ஏ., வரலாறு படித்தார்; பி.எல்., பட்டம் பெற்றார்.சென்னை உயர்நீதிமன்றத்தில், முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரானார். திறமையால், சென்னை அட்வகேட் ஜெனரலாக உயர்ந்து, 15 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தார். நீதிபதி பதவி, பல முறை தேடி வந்தும், அதை நிராகரித்தார்.சென்னை மாகாணத்திலிருந்து, ஆந்திராவைப் பிரிப்பதற்கு முன், அப்போது பிரதமராக இருந்த நேரு, டில்லியில் இருந்து, நீதிபதி வான்சூ என்பவரை, சென்னைக்கு அனுப்பி, இவரிடம் கருத்து கேட்கும் அளவிற்கு, சட்டம் நுணுக்கமும், புகழும் பெற்றிருந்தார். 1953 அக்., 3ம் தேதி காலமானார்.அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
14-மே-202022:26:04 IST Report Abuse
adalarasan i would like to mention here that he was one of the important, committee members formed to form the indian constitution,headed by dr.Ambedkar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X